இனிதே தொடங்கியுள்ள மக்களவை தேர்தல் 2019-யை முன்னிட்டு வாக்களிப்பது எப்படி %23இந்தியா என்ற விழிப்புணர்வு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மே 19 இன்று 8 மாநிலங்கள் உட்பட யூனியன் பிரதேசம் என மொத்தமாக 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
2019 இந்தியப் பொதுத் தேர்தலின் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள் விபரம் உத்திர பிரதேசம், பீகார், ஹரியானா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மற்றும் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதி போன்றவற்றில் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல். லோக் சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேர்தல் மே 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
வாக்களிப்பது எப்படி %23இந்தியா
நமது நாட்டில் வாக்களிக்க 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தகுதியுடைவர்களாகும். 18 வயது நிரம்பியவர்கள் இந்திய தேர்தல் ஆனையம் வழங்குகின்ற வாக்காளர் அட்டை பெற்றிருப்பவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.
வாக்காளர் பெயர் பட்டியிலில் உங்களுடைய பெயர் இடம்பெற்றிருந்தால் போதுமானதாகும். வாக்காளர் அட்டை உட்பட 11 ஆவனங்களை பயன்படுத்தி பொது மக்களவை தேர்தலில் வாக்களிக்கலாம். தகுதியுள்ள ஆவனங்களின் பட்டியல் பின் வருமாறு ;-
- வாக்காளர் அட்டை
- பாஸ்போர்ட்
- ஓட்டுனர் உரிமம்
- மத்திய மாநில அரசு சார் பொது நிறுவனங்கள் பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள
- வங்கி அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள்
- பான்கார்டு,
- என்.டி.ஆர். கீழ் ஆர்.ஜி.ஐ. அளிக்கப்பட்ட ஸ்மார்டு கார்டு
- மகாத்மா காந்தி ஊரக வேலை பணிநிலை அட்டை
- தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
- புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம்
- தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்குச்சீட்டு மற்றும் பாராளுமன்ற
- சட்டசபை, சட்ட மேலவை, உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள்
போன்ற மேலே வழங்கப்பட்டுள்ள ஆவனங்களை கொண்டு வாக்கினை செலுத்தலாம்.
வாக்காளர்கள் எங்கே வாக்களிப்பது என்பதனை தெரிவிக்கும் வகையில் வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள். இந்த வாக்காளர் சீட்டில் உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடி முகவரி போன்ற விவரங்கள் உள்ளடக்கியிருக்கும் சீட்டை பயன்படுத்தலாம்.
தொடர்ந்து கூகிள் நிறுவனம் விழிப்புணர்வினை வழங்கும் வகையில் தனது முகப்பில் வாக்களிப்பது எப்படி %23இந்தியா என்ற டூடுலை வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் கேட்ஜெட்ஸ் தமிழன் :
- ஃபேஸ்புக் : கேட்ஜெட்ஸ் தமிழன் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : கேட்ஜெட்ஸ் தமிழன் ட்விட்டர்
- யு டியூப் : கேட்ஜெட்ஸ் தமிழன் யு டியூப்