வாக்களிப்பது எப்படி ? #இந்தியா
வாக்களிப்பது எப்படி ? #இந்தியா

18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பது எப்படி ? #இந்தியா என்ற நோக்கத்தில் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தியத் தேர்தல் 2019 பாராளுமண்ற தேர்தல் திருவிழா இன்றைக்கு இனிதே 20 மாநிங்களில் 91 தொகுதிகளில் தொடங்குகின்றது.

அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உட்பட பல்வேறு மாநிங்களில் 91 லோக் சபா உறுப்பிணர்களுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவில் இன்றைக்கு மட்டும் சுமார் 14.21 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்களிப்பது எப்படி

18 வயது நிறைவடைந்த இந்திய குடிமக்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியிலில் இணைத்துக் கொண்டிருந்தால் அவர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாகும். உங்களுக்கான வாக்களர் அடையாள அட்டை பெற்றிருந்தால், நீங்கள் 100 சதவீதம் வாக்களிக்க தகுதி உடையவராகும்.

உங்கள் தொகுதிக்கான தேர்தல் தேதிக்கு (தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி) ஒரு சில நாட்களுக்கு முன்னதாக எங்கே வாக்களிப்பது?’ என்ற விவரத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பே வீடு தேடி வந்து தேர்தல் பணியாளர்கள் தருவார்கள்.  இந்த பூத் ஸ்லிப்பில், உங்களின் பெயர், புகைப்படம், வாக்குச்சாவடியின் முகவரி போன்றவை இடம்பெற்றிருக்கும்.

பூத் ஸ்லிப் உடன் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கபட்ட உங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தலாம்.

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், மத்திய மாநில அரசு சார் பொது நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் இவற்றால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள பணியிட அடையாள அட்டைகள், வங்கி அஞ்சல் அலுவலகத்தால் அளிக்கப்பட்ட புகைப்படம் உள்ள கணக்கு புத்தகங்கள், பான்கார்டு, என்.டி.ஆர். கீழ் ஆர்.ஜி.ஐ. அளிக்கப்பட்ட ஸ்மார்டு கார்டு, மகாத்மா காந்தி ஊரக வேலை பணிநிலை அட்டை, தொழிலாளர் நலத்துறையின் திட்டத்தில் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நலவாழ்வு காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படம் உள்ள ஓய்வூதிய ஆவணம், தேர்தல் நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட வாக்குச்சீட்டு மற்றும் பாராளுமன்ற, சட்டசபை, சட்ட மேலவை, உறுப்பினர்களால் அளிக்கப்பட்ட அலுவல் அடையாள அட்டைகள் ஆகிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.

உங்கள் வாக்குகளை மறக்காமல் செலுத்துங்கள் நாட்டை வளமாக்குங்கள்,,! வாக்களிக்கும் சதவீகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கூகுள் இந்தியா விழிப்புணர்வு வாக்களிப்பது எப்படி #இந்தியா டூடுலை வெளியிட்டுள்ளது.

வாக்குகளை செலுத்துவது என்பது ஒவ்வொரு குடிமகனும் ஆற்ற வேண்டிய கட்டாய கடமையாகும்.