சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஸ்மார்ட்போன் விற்பனையை பின்னுக்கு தள்ளி சீனாவைச் சேர்ந்த ஹூவாவே நிறுவனம் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஹுவாவே மொபைல்கள்

சீனாவைச் சேர்ந்த ஹூவாவே நிறுவனத்தின் இந்தியா பிரிவின் இயக்குநர் ஆலன் வாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச மொபைல்போன் விற்பனையில் ஆப்பிளை விட கூடுதலான எண்ணிக்கையில் மொபைல்களை 2016 டிசம்பரில் விற்பனை செய்துள்ளதால் 13.2 சதவிகித பங்களிப்புடன் உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 டிசம்பர் மாத முடிவில் 13.9 கோடி அலைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டு 3.2 சதவிகித பங்களிப்பை ஹூவாய் பெற்றிருந்த இதே காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனம் 12 சதவிகித பங்களிப்பை மட்டுமே கொண்டிருந்துள்ளது.

உலகின் முதன்மையான மொபைல் தயாரிப்பாளராக தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் உள்ளது. ஆனால் ஒரு சில நாடுகளில் சாம்சங்கை விட கூடுதலான எண்ணிக்கையில் ஹூவாவே போன்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

சமார் 74 நாடுகளில் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற ஹூவாவே ஹானர் பிராண்டு உலகின் முதன்மையான ஆன்லைன் பிராண்டாக விளங்குகின்றது என குறிப்பிட்டுள்ளார்.