huawei

எங்களின் 5ஜி தொழில்நுட்பத்துக்கு இணையான டெக்னாலாஜியை போட்டியாளர்கள் உருவாக்க குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவைப்படலாம் என ஹுவாவே நிறுவனர் ரென் ஜெங்ஃபீய் (Ren Zhengfei) தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் ஹுவாவே நிறுவனம் உட்பட 68 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் அறிவித்துள்ளார்.

ஹூவாய் நிறுவனம், கூகுள் ஆண்ட்ராய்டு உட்பட இன்டெல், குவால்காம் போன்ற நிறுவனங்களின் முக்கிய தொழில்நுட்ப ஆதரவுகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா வணிகத்துறை மேலும் 90 நாட்கள் வரை பயன்படுத்திக் கொள்ள அவகாசம் அளித்துள்ளது. இதன் காரணமாக ஹூவாய் ஆகஸ்ட் 19ந் தேதி வரை மட்டும் கூகுள் ஆதரவை பெற இயலும். ஆனால் விற்பனை செய்யப்பட்ட மற்றும் கைருப்பில் உள்ள மொபைல்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்பட உள்ளது.

ஹுவாவே ரென் ஜெங்ஃபீய்

தற்போதைய அமெரிக்க அரசியல்வாதிகள் நம் வலிமையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள் என CCTVக்கு தெரிவித்துள்ளார். மேலும் ஹுவாய் நிறுவனர் Ren Zhengfei கூறுகையில் 5ஜி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது, வாவே நிறுவன 5ஜி நுட்பத்துக்கு இணையான நுட்பத்தை மற்ற நிறுவனங்கள் உருவாக்க இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹூவாய் உபகரணங்களில் பயன்படுத்தப்படும் சிப்புகளில் பாதி அமெரிக்காவிலிருந்து வருகின்றன, மற்ற பாதி பாகங்களும் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. “எனவே நம்மை உலகிலிருந்து தனிமைப்படுத்த முடியாது,” என்று ரென் கூறினார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்காவில் இருந்து பெறும் சிப்செட்களை எங்களால் உருவாக்க இயலும், அதற்காக நாங்கள் அந்த சிப்களை வாங்க மாட்டோம் என்ற அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி தலைமுறை தொழிற்நுட்பம் போட்டியாளர்களான எரிக்சன், நோக்கியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை விட அதி சிறந்தவையாக விளங்குகின்றது. ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளுக்கு ஹூவாய் டெலிகாம் உபகரணங்களை வழங்குவதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைக்கு ஆப்பிள் ஐபோன் உயர்தர மொபைல் என்ற பெருமையை ஹூவாவே வீழ்த்தி விட்டத்து. ஆப்பிள் ஐபோன்களை விட உயர்தர கேமரா நுட்பம் சேவைகளை வழங்குதில் இந்நிறுவனம் முன்னணி வகிக்கின்றது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கான மாற்றாக ஓஎஸ் உருவாக்கும் பணிகளில் ஹுவாவே ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.