புதிய ஹூவாய் லேப்டாப்களின் சிறப்புகள் : MWC 2019

ஆப்பிள் மேக்புக்குகளை வீழ்த்த ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ மற்றும் ஹூவாய் மேட்புக் 14 என இரு லேப்டாப்புகளை இந்நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019-ல் அறிமுகம் செய்துள்ளது. ஷேர் 3.0 அம்சத்தில் ஒன்ஹாப் என்ற வசதி மூலம் விநாடிகளில் லேப்டாப் டூ மொபைல் ஷேரிங் செய்ய இயலும் என ஹூவாய் நிறுவனம் நிரூபித்துக்காட்டியுள்ளது.

ஹூவாய் நிறுவனம், நவீன வசதிகள் மற்றும் பல்வேறு சிறப்புகளை வழங்குவதில் முன்னணி வகிக்கின்றது. மேலும் இந்த அரங்கில் முன்பு அறிமுகம் செய்யப்பட்ட MateVook X புரோ மாடலில் டச் ஸ்கீரின் இணக்கப்பட்டுள்ளது.

Huawei Matebook X Pro வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹூவாய் மேட்புக் எக்ஸ் புரோ லேப்டாப் மாடல் மிகவும் சிறப்பான முறையில் செயல்படுகின்ற வகையில் 8வது தலைமுறை இன்டெல் ஐகோர் i7-8565U பிராசெஸருடன், NVIDIA GeForce MX250 கிராபிக்ஸ் அமைப்பை பெற்று 8 ஜிபி, 16 ஜிபி ரேம் மற்றும்  1TB  சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

புதிய ஹூவாய் லேப்டாப்களின் சிறப்புகள் : MWC 2019

13.9 அங்குல LTPS முழுவியூ டிஸ்பிளே கொண்ட இந்த மாடலில் 3,000 x 2,000 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டதாக வந்துள்ள ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ எடை 1.33 கிலோ கிராம் ஆகும்.  மேலும் இந்த லேப்டாப் வெப்பத்தை கட்டுப்படுத்த நவீன கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இரண்டு Huawei Shark Fins 2.0 வழியாக அதிகப்படியான காற்றினை வழங்குகின்றது.

மேலும் இந்த லேப்டாப்பில் கேமரா பாதுகாப்பு காரணமாக கீபோர்டுகளில் பொருத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்போது மட்டும் கேமராவை இயக்கலாம். மேலும் மிகவும் அதி வேகமாக இணையத்தை பெறும் வை-ஃபை மற்றும் Thunderbolt 3 போர்ட் மூலம் அதிகபட்சமாக  40Gbps வேகத்தில் இணையத்தை பெறலாம். சிறப்பான பாதுகாப்பினை பெற கைரேகை சென்சார் மூலம் பவர் ஆஃப் மற்றும் ஆன் செய்ய வழிவகுக்கின்றது.

Huawei Matebook X 14 வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹூவாய் மேட்புக் 14 லேப்டாப் இந்த வரிசையில் 8வது தலைமுறை இன்டெல் ஐகோர் i7-8565U பிராசெஸருடன், NVIDIA GeForce MX250 கிராபிக்ஸ் அமைப்பை பெற்று 16 ஜிபி ரேம் மற்றும்  1TB  சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

புதிய ஹூவாய் லேப்டாப்களின் சிறப்புகள் : MWC 2019

14 அங்குல முழுவியூ டிஸ்பிளே கொண்ட இந்த மாடலில் 2,160 x 1,440 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டதாக வந்துள்ள ஹூவாய் மேட்புக் 14 ஆகும்.  மேலும் இந்த லேப்டாப் வெப்பத்தை கட்டுப்படுத்த நவீன கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இரண்டு Huawei Shark Fins 2.0 வழியாக அதிகப்படியான காற்றினை வழங்குகின்றது. சிறப்பான பாதுகாப்பினை பெற கைரேகை சென்சார் மூலம் பவர் ஆஃப் மற்றும் ஆன் செய்ய வழிவகுக்கின்றது.

ஹூவாய் மேட்புக் X புரோ விலை Euro 1,599 (ரூ.1.28 லட்சம்) Core i5/8GB RAM/512GB மற்றும்  Euro 1,999 (ரூ.1.61 லட்சம்) Core i7 processor/16GB RAM/1TB ஆகும்.  மேட்புக் 13 விலை Euro 999 முதல் Euro 1,399 வரை மற்றும் மேட்புக் 14 விலை தொடங்க Euro 1,199 முதல் Euro 1,499 வரை ஆகும்.