கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே  (updated)

ஹுவாவே நிறுவனம், இனி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த தொழில்நுட்ப உத்தரவு தொடர்பான அறிக்கையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஆண்ட்ராய்டு இயங்குதளம் திறந்தவெளி மென்பொருள் என்பதனால் ஹுவாய் அனுக இயலும், கூகுள் நிறுவனத்தின் செக்கியூரிட்டி சார்ந்த நுட்பங்களை இரு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ள இயலாது. இதன் காரணமாக கூகுள் பிளே, யூடியூப் மற்றும் ஜிமெயில் போன்றவை பயன்படுவத்தில் இநிறுவன மொபைல்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அமெரிக்கா-சீனா ஹுவாவே

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார்.

கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே  (updated)

கூகுள் நிறுவனத்தின் திறந்தவெளி மென்பொருள், இன்றைக்கு கோடிக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் பயன்படுத்துவதில் ஹுவாவே நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனம் Huawei Technologies Co Ltd நிறுவனத்துக்கு வழங்கி வரும் மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் சார்ந்த நுட்பங்களை வழங்குவதனை நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஹுவாவே நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு ஓஎஸ் முதல் ஜிமெயில், கூகுள் பிளே ஸ்டோர் போன்றவற்றை ஹூவாய் நிறுவனத்தின் மொபைல்களில் பயன்படுத்த இயலாது.

தற்போது கூகுள் ஆண்ட்ராய்டு வெளியிட்டுள்ள டிவிட்டில், ஹுவாவே நிறுவனத்தின் முந்தைய மொபைல் போன்கள் அதாவது விற்பனையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஆண்டாராய்டு ஆதரவு தொடர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இனி வரும் புதிய ஹுவாவே மறும் ஹானர் ஸ்மார்ட்போன்களில் ஹுவாய் பயன்படுத்த இயலாது.

Update, May 20, 2019 (03:06 pm IST) : ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் ஆதரவு தொடர்பாக ஹூவாய் மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் ஹுவாவே தொடர்ந்து ஆண்ட்ராய்டு சார்ந்த மேம்பாடுகளை சர்வதேச அளவில் வழங்க உள்ளோம் என தெரிவித்துள்ளது.

விற்பனை செய்யப்பட்ட மற்றும் விற்பனைக்கு கையிருப்பில் உள்ள ஹுவாவே மற்றும் ஹானர் மொபைல், டெப்லெட் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.

ஆனால் இந்த அறிக்கையில் வரவுள்ள தனது அடுத்த மொபைல் மாடல்கள் குறித்து அதற்கான ஓஎஸ் பற்றி எந்த தெளிவான கருத்தையும் இந்நிறுவனம் உறுதியளிக்கவில்லை.

Update, May 21, 2019 (09:30 am IST) : உடனடியாக அமெரிக்காவின் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்ததால், அனைத்து சேவைகளையும் திரும்ப பெறுவதாக கூகுள் அறிவித்த நிலையில், தற்போது ஹுவாவே நிறுவனத்துக்கு வழங்கப்படும் ஹார்டுவேர், மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை மேலும் 90 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா வணிகத் துறை அறிவித்துள்ளது. எனவே ஹூவாய் நிறுவன மொபைல் மற்றும் ஹானர் பிராண்டிற்கான ஆதரவு ஆகஸ்ட் 19 வரை கிடைக்கப் பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்பட்ட மற்றும் விற்பனைக்கு கையிருப்பில் உள்ள ஹூவாய் மற்றும் ஹானர் மொபைல்களுக்கு தொடர்து கூகுள் தனது மேம்பாட்டை வழங்கும். கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 90 நாட்களுக்கான தளர்வு காலத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் ஹுவாய் தொடர்ந்து ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தை பயன்படுத்தலாம்.

தற்போதைய அமெரிக்கா தடை அறிவிப்பு மொபைல் தயாரிப்பாளர்கள மத்தியில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மாற்றான புதிய ஓஎஸ் தயாரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வீழ்த்த புதிய ஓஎஸ் அறிமுகம் ஆகலாம் என கருதப்படுகின்றது.