Home Tech News ஸ்மார்ட்போன் முதல் IoT வரை வாவே ஆர்மோனி ஓஎஸ் அறிமுகமானது

ஸ்மார்ட்போன் முதல் IoT வரை வாவே ஆர்மோனி ஓஎஸ் அறிமுகமானது

ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களுக்கு மாற்றாக ஆர்மோனி வாவே நிறுவனத்தின் இயங்குதளம் அறிமுகம் செயப்பட்டுள்ளது. இந்த ஓஎஸ் ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி, அணியக்கூடிய கருவிகள் முதல் அனைத்து இணையம் சார்ந்த பொருட்களிலும் இயங்கும் திறந்தவெளி மென்பொருளாகும்.

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் இயங்குதளத்தை ஹார்மனி ஓஎஸ் என்று அழைக்கிறது. ஹார்மனி ஓஎஸ்  ஒருங்கிணைந்த பயனர் அனுபவத்திற்காக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஹூவாய் தனது ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், அணியக்கூடியவை மற்றும் ஐஓடி சாதனங்களில் கூட இயங்கும் ஒற்றை இயங்குதளமாக இதைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஓஎஸ் முதன்முறையாக ஹானர் பிராண்டில் வரவுள்ள ஸ்மார்ட் ஸ்கிரீன் மூலம் நாளை சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்மோனி ஓஎஸ் 1.0 ஸ்மார்ட் ஸ்கிரீன் தயாரிப்புகளில் முதலில் அறிமுகம் செய்படும் என்பதை வாவே உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலான ஸ்மார்ட் சாதனங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் 5ஜி தொழில்நுட்பத்தில் வாவே முன்னோடியாக உள்ளது. மேலும் வரும் காலத்தில் அமெரிக்கா முன்னணி இயங்குதளங்களை விட சிறப்பான வளர்ச்சியை பெறுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Exit mobile version