Huawei P30 Pro: ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம்

இன்றைக்கு , இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிடப்பட்டுள்ள ஹூவாய் பி30 ப்ரோ (Huawei P30 Pro) மொபைல் போனின் தொடக்க விலை ரூ. 71,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் இடம்பெற்றுள்ள உயர்தர கேமரா நுட்பம் மூலம், உலகின் மிகவும் அட்வான்ஸ்டு கேமரா சிஸ்டத்தை பெற்ற ஸ்மார்ட்போன் மாடலாக பி30 ப்ரோ விளங்குகின்றது.

ஸ்மார்ட்போன் வராற்றில் முதன்முதலாக 10x ஆப்டிக்கல் ஆப்டிக்கல் பெரிஸ்கோப் கேமரா சென்சாருடன் கூடிய குவாட் கேமரா செட்டப் பெற்ற மாடலாகும். இந்நிறுவனம் கடந்த வருடம் மட்டும் சர்வதேச அளவில் 200 மில்லியன் ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனை செய்துள்ளது. இதில் ஹூவாய் மேட் வரிசை எண்ணிக்கை மட்டும் 10 மில்லியன் மற்றும் 17 மில்லியன் ஹூவாய் பி20 வரிசை மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 

ஹூவாய் பி30 ப்ரோ சிறப்புகள்

சீனாவைச் சேர்ந்த ஹூவாவே நிறுவனம், ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பல்வேறு நவீன அம்சங்களை வழங்குவதில் முன்னணி வகிக்கின்றது. குறிப்பாக இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள பி30 ப்ரோ மாடல் இதற்கு ஒரு முக்கிய சாட்சியாகும்.

6.47 அங்குல OLED திரையுடன் முழு ஹெச்டி பிளஸ் காட்சி அமைப்பினை பெற்று, 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டதாக விளங்கின்றது. இந்த போனை இயக்க ஹை சிலிக்கான் சிப்செட் Kirin 980 பிராசெஸர் கொண்டுள்ளது. பி 30 ப்ரோ போன் மாடலில் 8 ஜிபி ரேம் பொதுவாக பெற்று 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி  சேமிப்பு வசதி சர்வதேச அளவில் கொண்டிருக்கின்றது.

Huawei P30 Pro: ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம்

கேமரா பிரிவில் ஜெர்மனி நாட்டின் Leica நிறுவன ஆதரவுடன் P30 ப்ரோ போனில் வழங்கப்பட்டுள்ள குவாட் கேமரா செட்டப்பில் பிரைமரி சென்சாராக சூப்பர் செப்க்ட்ரம் 40 மெகாபிக்சல் , அல்ட்ரா வைட் ஏங்கிள் 20 மெகாபிக்சல் சென்சார் கேமரா, டெலிபோட்டோ கேமராவுக்கு என 8 மெகாபிக்சல் சென்சார் (5X zoom) உடன் வழங்கப்பட்டு, கூடுதலாக எல்இடி ஃபிளாஷ் கீழ் பகுதியில் Time-of-Flight (TOF) கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கு என பிரத்தியேகமான 32 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம்பெற்றுள்ளது. இந்த போனினை இயக்குவதற்கு என 40 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4,200 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி கொண்டு ஹூவாய் பி 30 புரோ போன் இயக்கப்படுகின்றது.

Huawei-P30-Pro-mobile-news-in-tamil

ஹூவாய் பி30 ப்ரோ விலை பட்டியல்

ஹூவாய் P30 Pro 8 GB + 256 GB  விலை ரூ. 71,990

ஹூவாவே பி30 ப்ரோ மொபைல் மாடலுக்கு போட்டியாக சாம்சங் கேலக்ஸி எஸ்10+, ஆப்பிள் ஐபோன் XS Max மற்றும் கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் போன்றவை விளங்குகின்றது.

ஹூவாயின் பி 30 ப்ரோ மாடல் அமேசான் இந்தியா வாயிலாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Huawei P30 Pro: ஹூவாய் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை மற்றும் விபரம்

மேலும் படிங்க – ஹூவாய் பி30 லைட் விலை மற்றும் சிறப்புகள்

 

HUAWEI P30 Pro specifications

  • 6.47 அங்குல (2340 x 1080 pixels) FHD+ OLED ஹெச்டிஆர் டிஸ்பிளே
  •  Kirin 980 (2 x Cortex A76 2.6 GHz + 2 x Cortex A76 1.92 GHz + 4 x Cortex A55 1.8 GHz) பிராசெஸர் உடன்  720 MHz ARM Mali-G76MP10 GPU
  • 8GB LPDDR4x ரேம் உடன் 128GB / 256GB / 512GB  சேமிப்பு வசதி
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் EMUI 9.0
  • 40MP ரியர் கேமரா f/1.6 துவாரம், OIS, 20MP அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் f/2.2 துவாரம், 8MP 5x டெலிபோட்டோ லென்ஸ் OIS, ToF டெப்த் சென்சார், Laser AF, PDAF, CAF, AIS
  • 32MP செல்பி கேமரா f/2.0 துவாரம்
  • இரு சிம் கார்டு
  • இன் டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • நீர் மற்றும் தூசு பாதுகாப்பு (IP53)
  • டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz and 5GHz) (wave2), ப்ளூடூத் 5 LE, GPS (L1 + L5 dual band), NFC, USB Type-C (GEN1)
  • 4200mAh ஃபாஸ்ட் சார்ஜிங்