மழையால் பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும்: ஹூவாய் நிறுவனம் அறிவிப்பு

சீனாவை சேர்ந்த எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஹூவாய் நிறுவனம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும் என்று அறிவித்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்து தரப்படும்: ஹூவாய் நிறுவனம் அறிவிப்பு

இதுகுறித்து ஹூவாய் நிறுவனம் இந்தியாவின் ஹவாய் வாடிக்கையாளர் வர்த்தக குழுவின் தயாரிப்பு இயக்குனர் ஆலன் வாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில், பாதிக்கப்பட்ட போன்களை இலவமாக ரிப்பேர் செய்யதேவையான ஏற்பாடுகளை செய்ய சர்வீஸ் டீம்மை தயாரிபடுத்தியுள்ளோம். இந்த டீம் முழு வீச்சில் செயல்பட்டு, பாதிக்கப்பட்ட போன்களை சரி செய்யும் பணிகளை செய்யும். இந்த ரிப்பேர் செய்யும் பணிகளுக்கு எந்த விதமான கட்டணமும் வசூல் செய்யப்படாது. என்று தெரிவித்துள்ளார்.

இந்த இலவச ரிப்பேர் சேவைகள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.