ஹுவாவே

வாவே நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஹாங்மெங் ஓஎஸ் (HongMeng OS) இயங்குதளத்தை அக்டோபர் மாதம் வெளியிட உள்ளது. இந்நிலையில் வாவே மொபைல் தவிர சியோமி, விவோ மற்றும் ஒப்போ நிறுவனங்களும் இந்த இயங்குதளத்தின் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் வழங்குகின்ற ஆண்ட்ராய்டு இயங்குதளம் உட்பட பல்வேறு அமெரிக்காவின் பொருட்களை வாவே நிறுவனம் பெறுவதற்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய இயங்குதளமான ஆண்டராய்டினை வீழ்த்த வாவே ஓஎஸ் வெளியிட உள்ளது.

வாவே ஓஎஸ்

முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப வெளியிட்டுள்ள கருப்பு பட்டியில் நிறுவனங்களில் வாவே இடம்பெற்றுள்ளதால் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தனது வாவே மற்றும் ஹானர் மொபைல்களில் பயன்படுத்த இயலாத நிலைக்கு உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் வாவே தள்ளப்பட்டுள்ளது.

போட்டியாளர்களை விட சிறப்பான பல்வேறு வசதிகளை வழங்குகின்ற வாவே நிறுவன மொபைல்களுக்கு சர்வதேச அளவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவின் தடை ஹுவாய் நிறுவனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வாவே தனது சொந்த இயங்குதளத்தை 2012 முதல் உருவாக்கி வருவதாக தெரிய வந்தது.

இந்த ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன் உட்பட அணியக்கூடிய கருவி மட்டுமல்லாமல் ரோபோ வரை வாவே சோதனை செய்து வரும் ஓஎஸ் பெயர் ஹாங்மெங் ஆகும். சமீபத்தில் சீனாவில் ஹாங்மெங் பெயருக்கு ஹுவாவே காப்புரிமை பெற்றுள்ளது. மேலும், ஐரோப்பா சந்தையிலும் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

வருகின்ற அக்டோபர் மாதம் ஹுவாவே நிறுவனம் தனது சொந்த இயங்குதளத்தை வாவே மேட் 30 வரிசையில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர, ஹுவாய் பி40 சீரிஸ் போன், லேப்டாப் உட்பட அனைத்திலும் படிப்படியாக விரவுப்படுத்த உள்ளது.

வாவே நிறுவனம் மட்டுமல்லாமல், சீனாவின் முன்னணி மொபைல் தயாரிப்பாளர்களான சியோமி, விவோ, ஒப்போ போன்ற நிறுவனங்களும் வாவே ஓஎஸ் இயங்குதளத்தை சோதனை செய்வதாக வாவே அதிகாரி ரிச்சர்டு யூ அளித்த பேட்டியை குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில் ஆண்ட்ராய்டை விட 60 சதவீத வேகத்தில் இந்த ஓஎஸ் வளர்ச்சி அடையும் என குறிப்பிட்டுள்ளார். எனவே, எதிர்காலத்தில் கூகுள் ஆண்ட்ராய்டு இயங்குதளமும் தனது சந்தை இழப்பதற்கான தொடக்கமாக கருதப்படுகின்றது.

கூகுள் நிறுவனம், வாவே ஓஎஸ் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு முன்பாக வாவே நிறுவனத்தை அமெரிக்கா கருப்பு பட்டியலில் இருந்து நீக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.