ஹுவாவே

ஹுவாவே நிறுனத்தின் சொந்த ஹாங்மெங் (HongMeng) மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் தடையை தொடர்ந்து தனது அடுத்தகட்ட நகர்வுகளை ஹுவாவே தொடங்கியுள்ளது.

ஹுவாவே நிறுவனத்தை அமெரிக்காவின் கருப்பு பட்டியிலில் இணைக்கப்பட்டதை தொடர்ந்து கூகுள், ஆண்ட்ராய்டு, குவால்காம், ARM, ப்ளூடூத் , வை-ஃபை எஸ்டி கார்டு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பயன்படுத்துவதில் வாவே நிறுனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஹுவாவே ஹாங்மெங்

வரும் ஜூன் மாதம் ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்துக்கு போட்டியாக தனது சொந்த இயங்குதளத்தை ஹாங்மெங் என்ற குறீயிட்டு பெயரில் கடந்த 2018 ஜனவரி மாதமே முழுமையாக தயாராகிவிட்டதாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் ஹுவாவே நிறுவன அதிகாரி ரிச்சர்டு யூ கூறுகையில் 2019 இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதுடன், 2020 முதல் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு ஆகஸ்ட் 19ந் தேதி வரை அமெரிக்கா வணிகத்துறை நீட்டித்துள்ளது. அதற்கு முன்பாக அமெரிக்கா ஹுவாவே மீதான தடையை நீக்கினால் தொடர்ந்து ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஹுவாவே கொண்டிருக்கும். ஆனால் தடை தொடரும் பட்சத்தில் ஹாங்மெங் ஓஎஸ் ஆண்ட்ராய்டுக்கு சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் சீன தொலைக்காட்சிக்கு (cctv) அளித்த பேட்டியில் ஹுவாவே நிறுவனர் ரென் செங்ஃபூ கூறுகையில், எங்களை அமெரிக்கா அரசியல்வாதிகள் நுட்பத்தினை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.