தேடுதல் தலைவர் கூகுள் நிறுவனத்தின் முகப்பு பக்கத்தை ஐசிசி 2017 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தையத்தை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்

ஐசிசி 2017 மகளிர் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன.

இன்று தொடங்க உள்ள கிரிக்கெட் போட்டியை நினைவுகூறும் வகையில் கூகுள் முகப்பில் நீங்களும் கிரிக்கெட் விளையாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் இடம்பெற்ற அதே டூடுலை வெளியிட்டுள்ளது.நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் கோப்பையை தட்டிச் சென்றுள்ள நிலையில், முதல் போட்டி இன்று கவுன்டி கிரிக்கெட் மைதானமான டெர்பியில் பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்து அணியுடன் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் மோதுகின்ற நிலையில் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com