நாளை முதல் லண்டனில் உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலம் நேரலையில் காண்பது எப்படி ? என்பதனை இங்கே அறிந்து கொள்ளலாம்.
ஜூன் 14, 2019 வரை நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நிகழ்வுகளை தொலைக்காட்சி தவிர நேரடியாக மொபைலில் லைவ் ஸ்கோர் பல்வேறு வழிகளில் கிடைக்க உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் 2019
இந்தியாவில் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை தனியாக யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ஜியோ , வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் தங்கள் பயனாளர்களுக்கு பல்வேறு வழிகளில் நேரலை தொலைக்காட்சி சேவைகளை பெற தங்களது செயலி மூலம் வழங்கி வருகின்றது.
இந்தியளவில் பின்வரும் தொலைக்காட்சிகளில் நேரலை ஒளிபரப்பினை பெற இயலும் இந்திய போட்டிகளுக்கும் தூர்தர்ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் Star Sports 1, Star Sports 1HD, Star Sports 1 Hindi, Star Sports 1 HD Hindi, Star Sports 1 Telugu, Star Sports 1 Kannada, Star Sports 1 Bangla, Star Sports Select 1 மற்றும் Star Sports Select 1 HD.
ஜியோ போன் மற்றும் ஜியோ பயனாளர்கள் உலகக்கோப்பையை காண்பது எப்படி ?
ஜியோ டிவி ஆப் சேவை அனைவரும் அறிந்த ஒன்றே இந்த ஆப் மூலம் நேரலையில் கிரிக்கெட் நிகழ்வினை பெறலாம். அடுத்தப்படியாக ஜியோ பயனர்கள் ஹாட்ஸ்டார் ஆப் பயன்படுத்தியும் இலவசமாக காணலாம்.
ஹாட்ஸ்டார் ஆப்
ஸ்டார் இந்தியாவின் ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரலையில் அனைத்து மொழி சேனல்களை பெற இயலும். ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா கட்டணத்தைச் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஏர்டெல் டிவி, வோடபோன் பிளே மற்றும் ஐடியா டிவி & மூவீஸ் போன்ற ஆப் வாயிலாகவும் பெறக்கூடும்.
நாளை தொடங்க உள்ள ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 2019-யின் தொட்ட விழா நிகழ்வை தூர்தர்சன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஆப் போன்றவற்றில் நேரலையாக இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு கண்டு மகிழலாம்.