கடலில் வழி தவறுகின்ற மீனவர்கள் உள்பட படகுகள், கப்பல்கள் உள்ளிட்ட 64 வகையான பொருட்களை கண்டுபிடிக்க SARAT என்ற பெயரில் செயிலியை கடல் தகவல் சேவைகளின் இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

SARAT ஆப்

ஆரம்பகட்டமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள  இந்த செயலி வாயிலாக கடலில் தத்தளிப்பவர்கள், காணமல் போனவர்களை உள்பட பல்வேறு வகையான 64 பொருட்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும் வகையில் சூப்பர் கணினிகளின் உதவியை கொண்டு ஹைத்திராபாத் கடல் சேவை மையத்துக்கான இந்திய தேசிய மையம் உருவாக்கியுள்ளது.

இந்த செயலியை புதுடெல்லியில் தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு (NMSAR) வாரிய கூட்டத்தில் இதன் பொது இயக்குனர் ராஜேந்திர சிங் அறிமுகம் செய்தார்.

தேடுதல் மற்றும் மீட்பு உதவிக்கான கருவி” எனும் பெயரில் “சரத்”(SARAT) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலி வாயிலாக ஜிபிஎஸ் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் போன்வற்றின் உதவியுடன் காணமால் போனவற்றை கண்டுபிடிக்கலாம். 9 வகையான கடலோர மாநில மொழிகளில் இந்த ஆப்ஸ் இயங்கும்.

கடலில் இருந்து 10 கி.மீ.தொலைவுக்குள் இருக்கும் மீனவர்கள், செல்போனில் நெட்வொர்க் கிடைத்தால்,  இதை பயன்படுத்த முடியும். இது குறிப்பாக மீனவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது.இந்த செயலியை பயன்படுத்தும் போது, அதாவது தேடுதல் பணியில் ஈடுபடும் போது, காணமல் போன பொருள், மனிதர்கள் கடைசியாக எங்கு இருந்தார்கள் என்ற விவரத்தை ஜிபிஎஸ் உதவியுடன் அதில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடுவதனால் சூப்பர் கணினிகள் செயற்கைக்கோள் துணையுடன் செயல்படுக்கூடிய வகையில் உள்ளதால் மிக விரைவாக கண்டுபிடிக்க முடியும்.

இதை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து விரைவில் கடற்படை பாதுபாப்பு படையினர் மீனவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். மேலும் இந்த செயலி 90 சதவிகதற்கு அதிகமான ஆண்ட்ராய்டு மொபைல்களில் இயங்கும் வகையிலும் மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்திற்கு மேலாக உள்ள கருவிகளில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.