கூகுள், ஆப்பிள் ஸ்டோரில் டிக் டாக் செயலியை நீக்க உத்தரவிட்ட அரசு

தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் டிக் டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் நீக்குவதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. எனவே, அடுத்த சில நாட்களில் இந்த செயலியை இனி அதிகார்வப்பூர்வமாக தரவிறக்க இயலாது.

மேலும் உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து டிக் டாக் செயலி மூலம் மேற்கொள்ளப்பட்ட வீடியோக்களை தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதி மன்ற தடை உத்தரவை ரத்து செய்யக் கோரிய டிக் டாக் மனு உயர்நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

டிக் டாக் செயலிக்கு தடை உறுதியாகிறது

இந்தியாவில் டிக் டாக் செயலியை தடை விதிக்க தொடர்ந்து பலதரப்பட்ட மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி விரைவில், அதிகார்வப்பூர்வ ஆண்ட்ராய்டு கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள ஸ்டோரிலும் நீக்குவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வரும் மார்ச் 16 ஆம் தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்ட்டுள்ளது.

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் மத்திய அரசின் உத்தரவை , தொடர்ந்து விரைவில் நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

update :-

டிக் டாக்கை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது.