ஏழை இந்தியா எங்களுக்கு தேவையில்லை என்ற கருத்தால் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள ஸ்னாப்சாட் பயனர்களின் 1.7 மில்லியன் கணக்குளை இந்திய ஹேக்கர்கள் லீக் செய்துள்ளனர்.

இந்திய ஹேக்கர்கள்

  • கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஸ்னாப்சாட் செயல்படுகின்றது.
  • பெயர் குறிப்பிடாத இந்திய ஹேக்கர்கள் குழு 1.7 மில்லியன் பயனர்கள் கணக்கை வெளியிட்டுள்ளது.
  • ஸ்னாப்சாட் ஸ்டார் ரேட்டிங் தொடர்ந்து சரிகின்றது.

இது பணகாரங்க ஆப் , ஏழை நாடுகளான இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்றவை எங்களுக்கு தேவையில்லை என கருத்து கூறியதாக ஸ்னாப்சாட் சிஇஓ ஈவான் ஸ்பீக்கல் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து நம நாட்டு மக்கள் அதிரடியாக ஸ்னாப்சாட் செயலியை அன்இன்ஸ்டால் செய்தும் ஸ்டார் ரேட்டிங் மதிப்பை குறைத்தும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆப்பிள் ஸ்டோரில் 5 ஸ்டார் ரேட்டிங்கில் இருந்து 1 ஸ்டார் ரேட்டிங்காக குறைந்துள்ளது. பிரபலமான கூகுள் பிளே ஸ்டோரில் 5 ஸ்டார் தரத்தில் இருந்து 4 ஸ்டாராக குறைந்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் #UninstallSnapchat மற்றும் #BoycottSnapchat போன்ற ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் சர்வதேச டிரென்டாக மாறி வருகின்றது. இந்த நிலையில் டெய்லிமெயில் வெளியிட்டுள்ள கட்டுரையில் பெயர் தெரியாத இந்திய ஹேக்கர்கள் குழு ஒன்று1.7 மில்லியன் ஸ்னாப்சாட் பயனர்கள் விபரங்களை ஹேக் செய்துள்ளதாக கூறுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈவான் ஸ்பீக்கல் கூறுகையில் 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் ஸ்னாப்சாட் ஆப் செயல்பட்டு வருகின்ற நிலையில் நான் அவ்வாறு கூறவில்லை குறைந்த இணைய வேகம் உள்ள இந்தியா மற்றும் ஸ்பெயின் போன்றவை தற்காலிகமாக தேவையில்லை என கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஸ்னாப் டீல் சிக்கியது…

ஸ்னாப்சாட் என்பதனை சிலர் தவறுதலாக ஸ்னாப்டீல் என புரிந்து கொண்டதன்விளைவாக இந்திய இ-காமர்ஸ் தளமான ஸ்னாப்டீல் ஆப் ரேட்டிங் சரிய தொடங்கியுள்ளனது. எனவே ரேட்டிங் செய்பவர்கள் ஸ்னாப்சாட் தானா என உறுதி செய்து கொள்ளுங்கள்……….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here