இந்தியர்கள் மொபைலை விரும்பும்போதும், இண்டர்நெட்க்கு வை-பை பயன்படுத்துவதை விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

உலகளவில் அதிக அளவு டேட்டா பயன்படுத்துபவர்கள் கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது. இந்தியார்கள், வை-பை பயன்படுத்துவதை விட தங்கள் மொபைல் போன் மூலமாகவே இன்டர்நெட்-ஐ பயன்படுத்துகின்றனர். உலகளவில் இன்டர்நெட் பயன்படுத்த வை-பை பயன்படுத்தி வருவது தனித்துவம் மிக்க டிரண்டாக இருந்து வருகிறது. ஸ்மார்ட்போன் மூலம் இந்தியர்கள் இன்டர் நெட்டை பயன்படுத்தும் மதிப்பு, அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக உயரும் என்று இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக, இந்தியாவில் ஆண்டுதோறும் 40 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இன்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர். இதன மூலம் உலகளவில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இன்டர்நெட் பரவியுள்ள நாடுகளில் சீனா மற்றும் பிரேசிலை விட பின்தங்கியுள்ள நிலையில், இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. கூகிள் மற்றும் உமிடியார் நெட்வொர்க் உடன் பேயன் & கம்பெனி நடந்திய ஆய்வில், இந்தியாவில் புதிதாக இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பர்கள் 500 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தள்ளது.

இதுகுறித்து பேசிய பேயன் & கம்பெனி உயர் அதிகாரி ஜாய்தீப் பட்டாச்சார்யா, அடுத்து மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், ஆன்லைன் வர்த்தகத்தின் தாக்கம் 50 பில்லியன் டாலராக உயரும் என்றார். கடந்த 2017ம் ஆண்டில் இந்தியாவில் இ-காமர்ஸ் சில்ல்ல்ரை விற்பனை, 20 பில்லியன் டாலராக இருந்தது. இது நாட்டின் மொத்த சில்லறை விற்பனையில் 2 சதவிகிதமாகும்.

இதுகுறித்து பேசிய உமிடியார் நெட்வொர்க் இந்தியா அட்வைசர்ஸ் நிறுவன அதிகாரி ரூபா குடுவா, அதிக நேரம் இன்டர்நெட் பயன்படுத்துவது என்பது அதிகளவு சோஷியல் கம்யூனிகேஷன் செய்யப்படுகிறது என்பதையே குறிக்கிறது. இதில் பெரும்பாலான பகுதிகளை ஆண் மற்றும் பெண் மணமுறிவு குறித்தவையாகவே உள்ளது என்றார்.

Recommended For You