எல்லாமே ஆதார் என்ற ஆன பின்னர் ஸ்மார்டோன் செயல்பாட்டிலும் முதன்முறையாக ஆதாரால் அங்கீகரிப்பட்ட இயங்குதளத்தை இன்டஸ் ஓஎஸ் மற்றும் டெல்டா ஐடி இணைந்து உருவாக்கியுள்ளது.

இன்டஸ் ஓஎஸ்

உலகின் முதல் பிராந்தியரீதியான இயங்குதளம் என அறியப்படுகின்ற இந்தியாவின் இன்டஸ் இயங்குதள நிறுவனமும், கருவிழி ஸ்கேனர் நுட்பத்தில் சிறந்து விளங்குகின்ற டெல்டா ஐடி என இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவிற்கான முதல் ஆதார் அடிப்படையிலான இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது.

இன்டஸ் ஓஎஸ் நிறுவனம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இயங்குதளத்தை வழங்கும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஓஎஸ் 12 பிராந்திய மொழிகளில் கிடைப்பதுடன், இந்திய மொபைல் தயாரிப்பாளர்களான மைக்ரோமேக்ஸ், கார்பன், இன்டெக்ஸ், செல்கான், மற்றும் ஸ்வைப் போன்ற 6 நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றது.

எவ்வாறு செயல்படுகின்றது ?

கேமராவில் உள்ள ஐரீஷ் ஸ்கேனர் மற்றும் ஓஎஸ் மென்பொருள் ஆகியவற்றின் அடிப்படையிலாக கூட்டாக இயங்குகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கண்னின் கருவிழி படலத்தை ஸ்கேன் செய்யும் பொழுது ஆதார் யூஐடி எனப்படும் எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் விபர தகவல்களை பெற்று அது உங்களுடைய யூஐடி என உறுதி செய்ய யெஸ் அல்லது நோ என கேட்கும், யெஸ் என கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய ஆதாருடன் இணைந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்மார்ட்போனில் பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2020ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் அதாவது 10 கோடி பயனாளர்களை இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என இன்டஸ் ஓஎஸ் தெரிவிக்கின்றது.