இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்

ஷாப்பிங் செய்ய அதிக விருப்பம் கொண்டவர்களுக்கு உதவ இன்ஸ்டாகிராம் முன் வந்துள்ளது. இதற்காக தனது அப்ளிகேஷனில் புதிதாக ஷாப்பிங் டேப் ஒன்றை இணைக்க நடவடிகைகள் மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்

மேம்படுத்தப்பட்ட இன்ஸ்டாகிராம் அப்ளிகேஷன்கள், பயனாளர்களை, தனித்துவம் கொண்ட ரீடேல் மெர்ச்சென்ட்களை புரவுஸ் செய்து கொள்ள வழி வகை செய்கிறது. இதில் ஷாப்பிங் நிறுவனங்களில் ஸ்டிக்கர்களை இணைக்கப்பட்டுள்ளதுடன், பயனாளர்கள் தங்கள் விரும்பும் பொருட்களை ஷாப்பிங் செய்து கொள்ளவும் உதவுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஷாப்பிங் செய்ய தயாராகுங்கள்

பேஸ்புக் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஷெரில் சாந்திபெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 90 மில்லியன் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள், ஷாப்பிங் டேப்பை தங்கள், பக்கத்தில் இணைத்துள்ளனர். 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பிசினஸ் அக்கவுண்ட் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 மில்லியன் பேர் பேஸ்புக்கில் தங்கள் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி நவீன மாற்றங்களாக, போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் இணையதளமான இன்ஸ்டாகிராம் புதிதாக இ-காமர்ஸ் துறையில் நுழைந்துள்ளது.