அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்

அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாகபேஸ்புக் நிறுவனத்தின் போட்டோ -ஷேரிங் பிளாட்பாரம் ஆன இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இந்த டூல் மூலம் புகைப்படங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தடுக்கப்படும். இதற்காக மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் போட்டோகள் மற்றும் அதன் கேப்சன்களில் எந்த வகையிலான அச்சுறுத்தல் தகவல் இடம் பெற்றிருந்தால் அது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும்.

அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மெஸ்ஸேரி தனது பிளாக்போஸ்டில் வெயிட்டுள்ள தகவலில், இதன் புதிய டூல் மூலம் போட்டோகள் மற்றும் அதன் கேப்சன்கள் மூலம் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டு விடும். இது இளைய சமூகத்தை பாதுகாக்க உதவும். ஏன்னென்றால் மற்றவர்களை இளைய தலைமுறையினரே இதுபோன்ற அச்சுறுத்தல்களால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அச்சுறுத்தல்களை தடுக்க புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்தது இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் துணை நிறுவனம் கெவின் சிண்ட்ரோமிற்கு பதிலாக மெஸ்ஸேரி பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில்நுட்பம் அடுத்த சில வாரங்களில் தனது பணியை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக் முன்பு நிறுவனம் சார்பில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கமாண்ட்களை பில்டர் செய்யும் தொழில்நுட்ப அறிமுகம் செய்யப்பட்டது