சர்வதேச மகளிர் தினம்: வாட்ஸ்ஆப், ஹைக்கில் பெண்கள் தின ஸ்டிக்கர்கள் அறிமுகம்

இன்று., சர்வதேச மகளிர் தினம் 2019 கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெக் நிறுவனங்களும் பல்வேறு புதுமைகளை செயற்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் பெண்கள் தினத்திற்காக முன்னணி தகவல் பரிமாற்ற செயலிகளான வாட்ஸ்ஆப் மற்றும் ஹைக் செயலிகளில் ஸ்டிக்கர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னணி கூகுள் நிறுவனம், தனது முகப்பில் டூடுள் வெளியிட்டு 13 பெண்களின் சிறந்த சிந்தனை துளிகளை தொகுத்து வழங்கியுள்ள நிலையில், முன்னணி இ-காமர்ஸ் வலைதளங்கள் பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை மேற்கொண்டுள்ளன. அதேபோல மெசஞ்சிங் செயலிகளும் ஸ்டிக்கர்களை வெளியிட்டுள்ளன.

சர்வதேச மகளிர் தினம்: வாட்ஸ்ஆப், ஹைக்கில் பெண்கள் தின ஸ்டிக்கர்கள் அறிமுகம்

சர்வதேச மகளிர் தினம் 2019 ஸ்டிக்கர்கள்

முதன்முறையாக 1910 ஆம் ஆண்டு தொடங்கிய மகளிர் தினம் தொடர்பான கோரிக்கை பின்னாளில், பெண்களுக்கான வாக்குரிமை உட்பட பல்வேறு உரிமைகளை பெற்றுத்த தர காரணாக அமைந்துள்ளது.  1975 ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபை மார்ச் 8ம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

மேலும் படிக்க –>  சர்வதேச மகளிர் தினம் வரலாறு

வாட்ஸ்ஆப், ஹைக் மற்றும் டெலிகிராம் போன்ற முன்னணி தகவல் பரிமாற்ற சமூக வலைதளங்கள் வழங்கியுள்ளன. ஹைக் செயலி பல்வேறு ஸ்டிக்கர்களைவ அனிமேஷன் முறையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் ஆளுமையை வெளிப்படுத்துக்கூடியவை, பெண்களுக்கான உரிமையை கோருதல், பெண்களுக்கான உரிமை போன்றவற்றை மையமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம்: வாட்ஸ்ஆப், ஹைக்கில் பெண்கள் தின ஸ்டிக்கர்கள் அறிமுகம்

சர்வதேச மகளிர் தினம்: வாட்ஸ்ஆப், ஹைக்கில் பெண்கள் தின ஸ்டிக்கர்கள் அறிமுகம்

வாட்ஸ்ஆப்பில் கிரேட் மைன்ட்ஸ் என பெண்களுக்கான பல்வேறு ஸ்டிக்கர் படங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டிக்கரிகளில் குறிப்பாக டயானா, வேல்ஸ் இளவரசி, கொக்கோ சேனல், விர்ஜினியா வூல்ஃப், ஆட்ரி ஹெப்பர்ன், மர்லின் மன்றோ, மற்றும் இளவரசி கிளியோபாட்ரா.., மேலும் பல பிரபலங்களின் வடிவ ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம்: வாட்ஸ்ஆப், ஹைக்கில் பெண்கள் தின ஸ்டிக்கர்கள் அறிமுகம்