இன்றைக்கு சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாடுப்பவதனை ஒட்டி மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் Celebrating Yoga என்ற பெயரில் சிறப்பு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

செலிபிரேட்டிங் யோகா

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்கள் அறிமுக்கப்படுத்தியுள்ள இந்த யோகா ஆப் வாயிலாக உங்களுடைய யோகா நடைபெறும் இடத்தை கூகுளில் குறிப்பிடுவது, யோகோ படங்கள் மற்றும் செல்ஃபீ போன்வற்றை பதிவேற்றலாம்.

இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்க பெறுகின்ற நிலையில் இதனை இன்ஸ்டால் செய்த பின்னர் யோகா நடைபெறும் இடம் உள்பட யோகோ படங்கள் போன்றவற்றை பகிரலாம், இந்த புகைப்படங்கள் ஆப் மற்றும் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் இணையதளத்திலும் பதிவேற்றப்படும்.

உலகின் மிக நீண்ட நாளாக கருதப்படுகின்ற இன்றைய நாளே சர்வதேச யோகா தினமாக கடைப்படிக்கப்படுகின்றது.