4ஜி வோல்ட், 3000mAh பேட்டரி, முன்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் கேமரா பெற்ற இன்டெக்ஸ் அக்வா செல்ஃபீ மொபைல் விலை ரூ.6,649/ என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செல்ஃபீக்கு இன்டெக்ஸ் அக்வா செல்ஃபீ மொபைல் விலை ரூ.6,649/-

இன்டெக்ஸ் அக்வா செல்ஃபீ

மிக சிறப்பான  செல்ஃபீ படங்களை பெறும் வகையிலான செல்ஃபீ பிரியர்களுக்கு ஏற்ற 5 மெகாபிக்சல் முன்புறம் எதிர்கொள்ளும் கேமராவில் எல்இடி ஃபிளாஷ் வசதி வழங்கப்படுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

5.5 அங்குல HD தரத்தை பெற்ற திரையுடன் கூடிய 720×1280 பிக்சல் தீர்மானத்துடன், மிக நேர்த்தியான டிசைனுடன் முன் மற்றும் பின்புறங்களில் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. ரோஸ் கோல்டு மற்றும் மேட் பிளாக் ஆகிய இரு நிறங்களிலும் கிடைக்கும்.

ப்ராஸசர் & ரேம்

1.3GHz குவாட்-கோர் ஸ்பேரட்ரம் SC9832 சிப்செட் கொண்டு 2ஜிபி ரேம் வசதியுடன்  16ஜிபி மெமரி உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது, மேலும் மெமரி நீட்டிப்பு 64ஜிபி ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

கேமரா

இன்டெக்ஸ் அக்வா செல்ஃபீ மொபைல் கேமரா பிரிவில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ளும் முன்புற கேமரா எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் 5 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் உள்ள பிரைமரி கேமரா துறையில் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபீக்கு இன்டெக்ஸ் அக்வா செல்ஃபீ மொபைல் விலை ரூ.6,649/-

பேட்டரி

பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 3000mAh பேட்டரி திறன் மூலம் அகுவா செல்ஃபீ மொபைல் இயக்கப்படுகின்றது.

மற்றவை

வைபை802.11, புளூடைத் 4.0, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட், 3.5mm ஆடியோ ஜாக் போன்வற்றின் ஆதரவை பெற்ற இந்த மொபைல் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்றது.

விலை

இன்டெக்ஸ் அக்வா செல்பீ விலை ரூ.6,649-க்கு ஆன்லைன் மற்றும் ஆஃபலைன் என இரண்டிலும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here