இந்தியாவின் இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட ரக ஸ்மாரட்போன் 4ஜி வோல்ட்இ ஆதரவுடன் ரூ.4,299 விலையில் இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் III மொபைல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்டெக்ஸ் அக்வா ஸ்டைல் III
பட்ஜெட் ரகத்தில் பல்வேறு மொபைல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் இன்டெக்ஸ் நிறுவனம் புதிதாக கருப்பு மற்றும் கேம்பைன் நிறத்திலான அக்வா ஸ்டைல் III மொபைலை அமேசான் தளத்தில் அறிமுக விலையாக ரூ.3,865 க்கு வெளியிட்டுள்ளது.
இந்த மொபைல் 5 அங்குல FWVGA திரையுடன் 1.3GHz குவாட் கோர் ஸ்பிரெட்டிரம் SC9832A பிராசஸர் கொண்டு செயற்படுத்தப்பட்டு 1ஜிபி ரேம் பெற்று 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் 64ஜிபி வரையிலான நீட்டிக்கும் வசதி பெற்ற மைக்ரோஎஸ்டி அட்டைக்கான இடவசதி வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டிருப்பதுடன், பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 5 மெகாபிக்சல் கேமரா கொண்டதாக கிடைக்கின்றது.
ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற இந்த ஸ்மார்ட்போன் 2,500 mAh பேட்டரி வசதியுடன், இருசிம் ஆதரவு, 4G, VoLTE, 3G, Wi-Fi, புளூடூத் மற்றும் GPS ஆகியவற்றை பெற்றதாக அக்வா ஸ்டைல் III கிடைக்கின்றது.