ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த வருடத்திற்கான ஐபோன் 8 மாடல் எந்த மாதிரியான வடிவத்தை பெற்றிருக்கும் என பல்வேறு படங்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் புதிதாக ஐபோன் 8 படங்களில் ஐஓஎஸ் 11 இயங்குதளத்துடன் கூடியதாக வெளிவந்துள்ளது.

ஐபோன் 8 படங்கள்

பல்வேறு படங்கள் தினமும் வெளிவந்து ஐபோன் 8 மீதான ஈர்ப்பினை அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போது வெளிவந்துள்ள ரென்டர் செய்யப்பட்ட படங்களில் டச் ஐடி சென்சார் டிஸ்பிளே கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளிவந்த மற்றொரு படத்தில் ஐபோன்8 மொபைலின் பின்புறத்தில் கைரேகை சென்சார் ஐடி அமைந்திருப்பதனை போன்ற படங்கள் வெளியாகியது.

தற்போது ஐடிராப்நியூஸ் வெளியிட்டுள்ள படத்தில் முக்கிய அம்சமாக ஆப்பிள் சமீபத்தில் வெளிப்படுத்திய ஐஓஎஸ் 11 இயங்குதளத்தை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டு ஐமெசேஜ், ஆப்பிள் ம்யூசிக் , மூடிக்கொள்ளும் திரை போன்றவை வந்துள்ளது.

ஐபோன் 8 மாடல் ஏஆர் நுட்பத்துடன் OLED டிஸ்பிளே உள்பட A11 சிப்செட் பிராசஸர் பெற்றதாக செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.