அனிமோஜி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஆப்பிள் ஐபோன் X பெற்றுள்ள வசதிகளில் குறிப்பிடத்தவற்றில் அனிமோஜி (AniMojis) மற்றும் ஃபேஸ் ஐடி ஆகியவை மிக முக்கியமானதாகும். குறிப்பாக எமோஜி-க்கு மேம்பட்டதாக அனி மோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அனிமோஜி

அனிமோஜி என்றால் என்ன ? அனிமேட்டேட் எமோஜி (Animated Emojis) என்பதன் சுருக்கமே அனிமோஜி என உருவாக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக அனி மோஜி ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் 11 இயங்குதளத்தை பெற்ற ஆப்பிள் ஐபோன் X ஆண்டு விழா எடிசன் மாடலுக்கு மட்டும் என பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள அனிமேஷன்மோஜி உங்கள் முகபாவனையை கொண்டு நீங்களே எமோஜி உருவாக்குவதுடன் அனி மோஜியுடன் வாய்ஸ் மற்றும் வீடியோ வடிவலில் ஆப்பிள் ஐமெசேஜ் வாயிலாக அனுப்பலாம். இதற்கு என பிரத்யேக மென்பொருள் ஃபேஸ் ஐடி நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

12 விதமான வகைகளில் வழங்கப்பட்டுள்ள அனி மோஜிக்கான படங்கள் வாயிலாக உங்கள் முகபாவனை அசைவுகளை 50 விதமான முக அசைவுகளை அலசி பதிவு செய்யும் ட்ரூடெப்த் கேமரா வாயிலாக பதிவு செய்யும்போது இதில் குரல் இணைப்பு மற்றும் வீடியோ வடிவிலும் பதிவு செய்து ஆப்பிள் ஐபோன் எக்ஸ் பயனாளர்களுக்கு மட்டுமே அனுப்ப இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காணொலியில் காண — >  

ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் கருவிகளில் இந்த வசதி வழங்கப்படவில்லை.

Recommended For You