இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி எம்விசா பேமெண்ட் வாயிலாக ஸ்மார்ட்போன் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 50 வரை கேஸ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரயில் முன்பதிவுக்கு ரூ.50 கேஸ்பேக் பெறும் வழிமுறை என்ன ?

ஐஆர்சிடிசி mவிசா பேமெண்ட்

ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி உள்ள mவிசா பேமெண்ட் க்யூக் ரெஸ்பான்ஸ் (QR) கோடு வாயிலாக ஸ்மார்ட்போன் மூலம் ரயில் கட்டணத்தை செலுத்துகின்ற வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 50 வரை கேஸ்பேக் சலுகையாக செப்டம்பர் 4 வரை வழங்க உள்ளது.

எம்விசா ஆப் வாயிலாக பயனாளர்கள் தங்களுடைய விசா கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா மிகப் பெரிய e- காமர்ஸ் தளமாக விளங்கும் நிலையில் எங்கள் வெற்றிக்கான திறவுகோல், ஐஆர்சிடிசி தளங்களில் நுகர்வோர் ஈடுபாட்டை டிஜிட்டல் முறையை அதிகரிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி சிஎம்டி ஏ.கே. மனோச்சா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here