ஜியோ கிளாஸ் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம்

விற்பனையில் உள்ள விரிச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டில் வெறும் 75 கிராம் எடையுடன் ரிலையன்ஸ் ஜியோ கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கிளாசில் விரிச்சுவல் முறையில் 25க்கு மேற்பட்ட செயலிகள் ஆதரவுடன், வீடியோ காலிங், ஆன்லைன் வகுப்பு போன்றவற்றை மேற்க்கொள்ளலாம்.

உங்கள் ஸ்மார்ட்போனுடன் ஒரு சிறிய கேபிளைப் பயன்படுத்தி இணைப்பினை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் மெய்நிகர், 3டி பரிமாணத்தில் ஹாலோகிராபிக் வீடியோ அழைப்புகள், கூட்டங்கள், ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றை நடத்த அனுமதிக்கிறது.

ஜியோ கிளாஸ் வழக்கமான சன் கிளாஸ்கள் போல் தெரிந்தாலும், பெரும்பாலானவற்றை விட தடிமனாக அமைந்துள்ளது. லென்ஸ்களுக்குப் பதிலாக இரண்டு ஹெச்டி டிஸ்பிளேவினை பெற்றதாக அமைந்துள்ளது. வெப்பத்தைக் குறைக்கும் வகையிலான அம்சம், பயனர்களின் வசதிக்கேற்ப ஆடியோ, மடக்கும் வகையிலான அமைப்பு கொண்டுள்ளது. மேலும், 75 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ள ஜியோ கிளாசில் கேமராவும் அமைந்துள்ளது.

ஜியோ கிளாஸ் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம்

நாம் இந்த கிளாசில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் போது 2டி முறையில் அழைப்புகளை பெறுவதுடன் 3டி முறையில் நம்முடைய பகிர்வுகளை காட்சிப்படுத்த இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் 43வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஜியோ டிவி பிளஸ், ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ 5ஜி சேவை, ஜியோ மார்ட் மற்றும் கூகுள் முதலீடு தொடர்பான விபரங்களும் வெளியாகியுள்ளது.