சென்னைக்கு ஜியோஃபைபர் பிராட்பேண்ட் எப்போது ?

  Ads

  ஜியோ நிறுவனத்தின் அடுத்தடுத்து வரவுள்ள சேவைகளில் ஜியோஃபைபர் பிராட்பேண்ட் சேவையும் ஒன்றாகும், சமிபத்தில் இணையத்தில் கசிந்துள்ள விபரங்களின் படி சென்னை பட்டியலில் இடம்பெறவில்லை.

  சென்னை ஜியோ ஃபைபர்

  ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய பிளான்களில் சில மாறுதல்களை செய்து இன்றைக்கு வெளியிட்டுள்ள நிலையில் ஜியோஃபைபர் தொடர்பான செய்திகளும் கசிந்துள்ளது.

  முந்தைய ஜியோ ரூ. 309 மற்றும் ரூ. 509 போன்ற ரீசார்ஜ் பிளான்களில் 28 நாட்கள் என்றிருந்த வேலிடிட்டியை 56 நாட்காக உயர்த்தி இன்று அறிவித்துள்ளது. மேலும் முந்தைய தன் தனா தன் பிளானை ரூ. 399 கட்டணத்தில் வெளியிட்டுள்ளது.

  முதற்கட்டமாக அகமதாபாத், டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், கோல்கத்தா சூரத், விசாகப்படிணம், வதோத்ரா உள்ளிட்ட நகரங்களில் தொடங்கப்படுவதற்கான தள வடிவமைப்பை ஜியோ தளத்தில் தெரிய வந்துள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நகரங்கள் இரண்டாவது கட்டமாக அறிமுகம் செய்யப்படலாம்.

  ஜியோ ஃபைபர் முன்னோட்ட சேவையில் முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டாலும் முன் பணமாக திரும்ப பெறத்தக்க வகையிலான பாதுகாப்பு வைப்புத் தொகை 4500 ரூபாய் செலுத்த வேண்டும்.

  இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளானில் மாதந்தோறும் 100GB இலவச டேட்டாவை அதிகபட்சமாக நொடிக்கு 100MB வேகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ள 100GB டேட்டா தீர்ந்த பின்னர் FUP வாயிலாக குறைந்தபட்ச வேகமாக 1Mbps ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வருகின்ற ஜூலை 21ந் தேதி நடைபெற உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொது கூட்டத்தில் ஜியோ ஃபைபர் உள்பட ரூ. 500 விலையிலான ஜியோ 4ஜி வோல்ட்இ ஃபீச்சர் மொபைல் போன்றவற்றின் முக்கிய விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  Comments

  comments