இந்தியாவில் டிஜிட்டல் சார்ந்த பணப்பரிமாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ சார்பில் ஜியோ  பேமெண்ட் வங்கி டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஜியோ பேமெண்ட் வங்கி

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஜியோ இணைந்து செயல்பட உள்ள இந்த பேமெண்ட் வங்கியின் சேவைகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வங்கி பயன்பாட்டிற்கு வருவது தாமதமாகியுள்ளது.

ஜியோ பேமெண்ட் வங்கி, 70:30 விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து செயல்படவுள்ளது.

பணப்பரிமாற்றம் செய்வதற்கான தகுதிகளை நிரூபிக்க ரிசர்வ் வங்கி கால அவகாசம் கொடுத்துள்ளதால் இதனை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகின்ற டிசெம்பர் மாத மத்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பேமெண்ட் வங்கி செயல்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.