Reliance Jio

இன்றைக்கு ஜியோ போன் 3, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியாக உள்ளது.  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக்கூட்டம், காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42 வது வருட பொதுக்கூட்டத்தில் ஜியோ நிறுவனம் சார்ந்த ஜியோபோன் 3 , ஜியோ ஜிகா ஃபைபர் கம்பி வழி இணைய சேவை, ஜியோ ஹோம் ஆட்டோமேஷன் என பல்வேறு அறிவிப்புகளுடன் இந்நிறுவனத்தின் மற்ற திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளது.

ஜியோ போன் 3

விற்பனையில் உள்ள ஜியோ போன், ஜியோ போன் 2 மாடல்களை தொடர்ந்து அடுத்த மாடலாக வெளிவரவுள்ள ஜியோ போன் 3 ஸ்மார்ட்போன் அல்லது ஃபீச்சர் ரக மாடலாக ஒரு வேளை அறிமுகம் செய்யப்பட்டாலும் பல்வேறு நவீன வசதிகளை பெற்றிருக்கும். குறிப்பாக இணையம் சார்ந்த வசதிகளை விரைவாக அனுக இயலும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல மாதங்களாக சோதனை செய்யப்பட்டு வருகின்ற பிராட்பேண்ட் ஜிகா ஃபைபரில், தற்பொழுது ரூ.4,500 பாதுகாப்பு வைப்பு நிதியாக வசூலிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதே திட்டத்துடன் கூடுதலாக சிங்கிள் பேண்ட் ரவுட்டர் வழங்கி ரூ.2,500 பாதுகாப்பு வைப்பு நிதியை கொண்டு மற்றொரு குறைந்த கட்டண பிளான் உட்பட வர்த்தக ரீதியான சேவையை சுமார் 1,100 நகரங்களில் தொடங்குவதற்கான ஜியோவின் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ.600 கட்டணத்தில் டிரிப்ள் பே பிளானில் பயனளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக வழங்கப்படுகின்றது. அதிகபட்சமாக 1000Mbps இணைய வேகத்தில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், ஜியோ செயலிகள், ஐபிடிவி உள்ளிட்ட சேவைகளை வழங்குகின்றது.

வரம்பற்ற முறையில் ஜியோ இணையத்தை வழங்குவதுடன் 100 ஜிபி டேட்டா உயர்வேகத்தில் வழங்கப்படும். பிறகு இணைய வேகம் சராசரிக்கு கீழாக குறைக்கப்பட உள்ளது. நாட்டின் பொரும்பாலான பகுதிகளில் ஜியோவின் குறிப்பிட்ட சில பயனாளர்கள் மற்றும் ஜியோ பணியாளர்களுக்கு சோதனை முறையில் ஜிகா ஃபைபர் வழங்கப்படுகின்றது. இணையத்தின் மூலம் தொலைக்காட்சியை சேவையை வழங்கும் ஐபிடிவி முறையும் இலவசமாக வழங்ப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.