ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவச 4ஜி ஜியோ போன் முன்பதிவு செய்த பயனாளர்களுக்கு இன்று முதல் விநியோகம் செய்யப்படுவதனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோபோன் முன்பதிவு செய்தவர்கள் விபரம் அறிவது எவ்வாறு ? என அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு ஜியோபோன் விநியோகம் எப்போது எளிமையாக அறியலாம்

ஜியோ போன் முன்பதிவு நிறுத்தம்

ஆகஸ்ட் 24ந் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களில் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதை தொடர்ந்து இணையதளம் முடங்கியது.

 

நேற்றைய தினமும் முன்பதிவு நடைபெற்று வந்த சூழ்நிலையில் தற்போது ஜியோ பீச்சர் போன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த முன்பதிவு தேதி மற்றும் நேரம் குறித்த விபரங்களை அறிய Register now பகுதி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

உங்களுக்கு ஜியோபோன் விநியோகம் எப்போது எளிமையாக அறியலாம்

ஜியோபோன் முன்பதிவு செய்தவர்கள்

நீங்கள் ஜியோ 4ஜி போனுக்கு ரூ. 500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தால் உங்கள் முன்பதிவு குறித்த விபரத்தை அறிய  ஜியோஃபோன் பதிவு செய்திருந்த மொபைல் எண்ணிலிருந்து 1800-890-8900 என்ற இலவச தொலை தொடர்பு எண்ணில் அழைத்து அதன் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மை ஜியோ ஆப் வாயிலாக My Vouchers டேபில் விபரத்தை அறிந்து கொள்ளலாம்.

ஜியோ ஃபோன் நுட்ப விபரம்

சுமார் 60 லட்சம் பயனாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற ரிலையன்ஸ் ஜியோ போன் நுட்ப விபரம் பின் வருமாறு.

2.4 அங்குல திரையுடன் ஜியோ 4ஜி வோல்ட்இ சிம் ஆதரவினை மட்டுமே இயக்கப்படுகின்ற இந்த மொபைல்போனில் ஜியோ ஆப்ஸ் மற்றும் பிரசத்தி பெற்ற நமோ அப் இணைக்கப்பட்டு கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்பட 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.

உங்களுக்கு ஜியோபோன் விநியோகம் எப்போது எளிமையாக அறியலாம்

முன்புறத்தில் VGA கேமரா மற்றும் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு 4 ஜிபி உள்ளடங்கிய சேமிப்புடன் அதிகபட்மாக 128ஜிபி வரையிலான நீட்டிக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ள ஜியோஃபோன் மிகவும் சக்திவாய்ந்த 2,000 mAh பேட்டரியை பெற்றுள்ளது.

அடுத்த முன்பதிவு ; ஸ்மார்ட்போனில் உள்ள மை ஜியோ ஆப் (Myjio app) மற்றும் ஜியோ இணையதளம் (jio.com) போன்றவற்றில் Pre Book now என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யலாம் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றில் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்வதற்கு அடுத்த சில வாரங்களுக்கு பிறகு தொடங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக ரூ. 500 செலுத்தலாம், அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம்.

உங்களுக்கு ஜியோபோன் விநியோகம் எப்போது எளிமையாக அறியலாம்

பணம் செலுத்துவது எவ்வாறு ?

ஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட் , டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம்.

 

உங்களுக்கு ஜியோபோன் விநியோகம் எப்போது எளிமையாக அறியலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here