ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை - சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்இந்தியர்களின் ஸ்மார்ட்போன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ போன் அடுத்த சில நாட்களில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ போன் – முதல் பார்வை

ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை - சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்

ரூ.1500 திரும்ப பெற தக்க வகையில் பாதுகாப்பு வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்பளிக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஆகஸ்ட் 24ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் 60 லட்சம் முன்பதிவுகளை பெற்றுள்ளதாக கருதப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் டெலிவரி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 60 லட்சம் மொபைல்கள் 10 முதல் 15 நாட்களுக்குள் டெலிவரி கொடுக்கப்படலாம்.

டிசைன் & டிஸ்பிளே

கேன்டிபார் டிசைன் பெற்ற ஜியோபோன் பிளாஸ்டிக் பாடியுடன்  2.4 அங்குல QVGA TFT திரையுடன் 320 x 240 பிக்சல் தீர்மானத்துடன் டி9 கீபேட் கொண்டதாக பின்புறத்தில் 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் அதன் அருகாமையிலே ஸ்பீக்கர் பெற்றுள்ளது. மேலும் நீக்கும் வகையிலான பேட்டரி, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் எல்இடி டார்ச் லைட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கீபேடில் உள்ள 5 எண்ணை அழுத்தி பிடித்தால் அவசர அழைப்புகளை (SoS – 112) பெறுவதுடன், * பட்டனை அழுத்தினால் கீபோர்டு திறக்கவும் # பட்டன் வாயிலாக ஆடியோ ப்ர்பைல் வசதியை மாற்றலாம்.

பிராசஸர் & ரேம்

மிக வேகமாக இயங்கும் வகையில் இந்த மொபைல் 4ஜி மற்றும் வோல்ட்இ ஆதரவுடன் கூடிய 1.1 GHz  குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட் (மற்றொரு மாடலில் 1.2 GHz ஸ்ப்ரெட்ரம் 9820A/QC8905 சிப்செட் ) பெற்ற 512 எம்பி ரேம் கொண்டு 4ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் நீட்டிக்கும் வகையில் 128ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டைக்கான ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை - சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்

ஓஎஸ் மற்றும் செயிலிகள்

கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படுகின்ற ஜியோபோன் மொபைலில் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் அடிப்படை அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  மை ஜியோஆப், ஜியோ சினிமா, ஜியோ மெசேஜிங், ஜியோ டிவி, ஜியோ ம்யூசிக் மற்றும் ஜியோ மணி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

மற்றபடி பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற எந்த சமூக வலைதளத்திற்கான ஆப்களும் வழங்கப்படவில்லை என்பதனால், இதனை பிரவுசர் வாயிலாக பெறலாம்.

கேமரா துறை

2 மெகாபிக்சல் சென்சார் கேமரா பெற்றுள்ள நிலையில் முன்புறத்தில் 0.3 மெகாபிக்சல் சென்சார் பெற்றதாக வீடியோ கால் மற்றும் செல்பி படங்களை பெறலாம்.

பேட்டரி

நீக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி 12 மணி நேரம் டாக்டைம் மற்றும் 15 நாட்கள் ஸ்டேன்ட் பை டைம் உடன் 2000 mAh  திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை - சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்

சிறப்பு வசதிகள்

மிக சிறப்பான வகையில் இணையத்தை பெறுவதுடன், ஜியோ டிவி செயலி வாயிலாக நேரலையில் தொலைக்காட்சி சேவைகளை பெறுவதுடன் , இதனை தொலைக்காட்சியில் இணைப்பதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. NFC மற்றும் GPS. போன் வசதிகளை கொண்டதாக கிடைக்கின்றது.

தமிழ், அசாமிய, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, காஷ்மீர், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தாலி, சிந்தி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய 22 மொழுகள் ஆதரவை பெற்றுள்ளது.  இதுதவிர, இந்த பீச்சர் போன் டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டென்ஸ் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகள் ஆதரவை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை - சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்

விலை மற்றும் சலுகைகள்

முதற்கட்டமாக கடந்த அக்ஸ்ட் 24ந் தேதி ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு விரைவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது. டெலிவரி சமயத்தில் இலவச 4ஜி சிம் ஏக்டிவேட் செய்வதற்கு ஆதார் கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரிலையன்ஸ் ஜியோ போன் முதல் பார்வை - சிறப்புகள் மற்றும் நுட்பங்கள்

ரூ.1500 விலை என அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ போன் 36 மாதங்களுக்கு பிறகு முழுமையாக திரும்ப பெறலாம் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here