ரிலையன்ஸ் ஜியோ தொலைத் தொடர்பு நிறுவனத்தின் புதிய பிளான்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, குறிப்பாக முந்தைய ரூ. 309 பிளான் மற்றும் ரூ. 509 பிளான்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது.

அதிரடி ஜியோ ஆஃபர் : புதிய பிளான் அறிமுகம் முழுவிபரம்

ஜியோ புதிய பிளான் விபரம்

ஜியோ நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான டேஃடா மற்றும் வேலிடிட்டி சலுகைகளை வழங்கும் வகையில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

முந்தைய ரூ. 309 பிளான் வரம்பற்ற அழைப்புகள், இலவச ரோமிங் உள்பட தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 56 நாட்கள் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் 56 ஜிபி டேட்டா பெறலாம்.

அதிரடி ஜியோ ஆஃபர் : புதிய பிளான் அறிமுகம் முழுவிபரம்

முந்தைய ரூ. 509 பிளான் வரம்பற்ற அழைப்புகள், இலவச ரோமிங் உள்பட தினமும் 2ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 56 நாட்கள் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் 112ஜிபி டேட்டா பெறலாம்.

மற்ற வியக்கதக்க பிளான்கள்

புதிய ஜியோ தன் தனா தன் ரூ. 399 பிளானில் 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. இது முதல் முறை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ரூ.999 பிளானில் முந்தைய கணக்கில் 60 நாட்கள் 60ஜிபி என வழங்கப்பட்ட நிலையில் தற்போது 90 நாட்கள் 90ஜிபி என மாற்றப்பட்டுள்ளது.

ரூ. 349 பிளானில் மொத்தமாக 56 நாட்களுக்கு 20ஜிபி டேட்டா வழங்குகின்றது.

முழுமையான பிளானை கீழே உள்ள படத்தில் காணலாம்.

அதிரடி ஜியோ ஆஃபர் : புதிய பிளான் அறிமுகம் முழுவிபரம்

ஜியோ போஸ்ட்பெயிட் பிளான்கள்

முந்தைய போஸ்ட்பெயிட் பிளான்களில் கூடுதலான வேலிடிட்டி சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ரூ. 309 பிளானில் 30 நாட்கள் என்ற வேலிடிட்டி தற்போது 60 நாட்களாக மாற்றப்பட்டு தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றது.

முந்தைய ரூ. 509 பிளானில் 30 நாட்கள் என்ற வேலிடிட்டி தற்போது 60 நாட்களாக மாற்றப்பட்டு தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கப்படுகின்றது.

அதிரடி ஜியோ ஆஃபர் : புதிய பிளான் அறிமுகம் முழுவிபரம்

உங்களுடைய டெக் தொடர்பான கேள்விகளை பதிவு செய்ய பயன்படுத்துங்கள் , தமிழ் டெக் டாக்கீஸ் – கேள்விகளை பதிவு செய்ய க்ளிக் பன்னுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here