கால்டாக்ஸியில் கால் பதிக்கவில்லை – ஜியோ

விரைவில் ஜியோ கால்டாக்ஸி  தொழிலில் கால்பதிக்க உள்ளதாக தகவலை ஜியோ அதிகார்வப்பூர்வமாக நிராகரித்துள்ளது. ஜியோ நிறுவனம் தற்பொழுது தொலைதொடர்பு சார்ந்த சேவைகளை மட்டுமே வழங்கி வருகின்றது.

ஜியோ கால்டாக்ஸி

ஜியோ கால்டாக்ஸி தகவல் குறித்து டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் அவ்வாறு எந்த சேவையையும் ஜியோ தொடங்கும் எண்ணமில்லை என கூறியுள்ளது.

சமீபத்தில் ஆங்கில இணையதளம் வெளியிட்டிருந்த தகவலின் அடிப்படையில் ஜியோ நிறுவனம் உபேர் , ஒலா  போன்ற ஆப் அடிப்படையிலான கேப் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

முதற்கட்டமாக சென்னை , பெங்களூரு போன்ற நகரங்களில் கால் டாக்ஸி சேவையை வழங்குவதற்கு 600க்கு மேற்பட்ட டாக்சிகளை ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களிடம் இருந்த வாங்கியுள்ளதாகவும் வெளியிடப்பட்டிருந்தது.

10 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வரும் ஜியோ நிறுவனம் புதிதாக ஜியோ ப்ரைம் பிளானை வருகின்ற ஏப்ரல் 1ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளது.

Recommended For You