உலக இணைய ஜாம்பவான் கூகுள் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ இணைந்து  குறைந்த விலை 4ஜி மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தி ஹிந்து பிசினஸ்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

கூகுள்-ஜியோ கூட்டணியில் உருவாகும் 4ஜி மொபைல் மற்றும் ஸ்மார்ட் டிவி

கூகுள்-ஜியோ

ஆண்ட்ராய்டு ஒன் பிளாட்பாரத்தை அடிப்படையாக கொண்ட இந்த குறைந்த விலை 4ஜி மொபைல் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றதாக விளங்கும் வகையில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ 4ஜி சேவையை பெறும் வகையில் இந்த குறைந்த விலை 4ஜி மொபைல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

மேலும் ஜியோ இந்தாண்டின் இறுதியில் ஜியோ டிடிஎச் சேவையை வழங்கலாம் என எதிர்பார்க்கின்ற நிலையில் ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தினை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல் அல்லது ஸ்மார்ட் டிவிக்கான மென்பொருள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4ஜி பீச்சர் மொபைல்

பல மாதங்களாக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வரும் ரூ.1000 விலையிலான ஃபீச்சர் மொபைல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here