முதற்கட்டமாக Lyf பிராண்டு மொபைல்களில் மட்டுமே வழங்கி வந்த சலுகையை சாம்சங் 4ஜி வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.
சாம்சங் ஜியோ 4ஜி மொபைல்கள்
4ஜி சேவையைபெறும் வகையிலான அதாவது FDD-LTE Band 3 (1800MHz) அலைவரிசையை பெறும் திறுனுள்ள மொபைல்களான சாம்சங் கேலக்சி A5, சாம்சங் கேலக்சி A5 (2016), சாம்சங் கேலக்சி A7, சாம்சங் கேலக்சி A7 (2016), சாம்சங் கேலக்சி A8, சாம்சங் கேலக்சி நோட் 4, சாம்சங் கேலக்சி நோட் 5, சாம்சங் கேலக்சி நோட் 5 Duos, சாம்சங் கேலக்சி நோட் எட்ஜ் , சாம்சங் கேலக்சி S6, சாம்சங் கேலக்சி S6 எட்ஜ், சாம்சங் கேலக்சி S6 எட்ஜ்+, சாம்சங் கேலக்சி S7 , மற்றும் தி சாம்சங் கேலக்சி S7 Edge ஆகிய மொபைல்களில் பெறலாம்.
சாம்சங் ஸ்மார்ட்போனில் ஜியோ 4ஜி டேட்டா பெறுவது எப்படி
சாம்சங் ஸ்மார்ட்போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பெறுவதற்கு உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் மைஜியோ (MyJio) ஆப்ஸ் தரவிறக்கம் செய்து அதிலுள்ள கேட் ஜியோ சிம் (GET JIO SIM ) ஆப்ஷனை தேர்வு செய்து பார்கோட் ஜெனரேட் செய்துகொள்ளுங்கள்.
ஜெனரேட் செய்த பார்கோட் ,உங்கள் அடையாள அட்டைக்கான சான்றிதழ் போன்றவற்றுடன் அருகில் உள்ள Lyf ஸ்டோர் , ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்றவற்றை அனுகி ஜியோ சிம் கார்டினை பெற்றுகொண்டு பயன்படுத்தலாம்.
புதிய ரிலையன்ஸ் ஜியோ சிம் பெற்றவுடன் உங்கள் சாம்சங் மொபைலில் பொருத்திய உடன் 1977 என்ற எண்ணுக்கு அழைத்து டெலி வெரிஃபிக்சன் செய்துகொள்ளுங்கள்.
வர்த்தரிதீயான சேவையை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை ஆகஸ்ட 15 முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக சேவைகளை பெற முயலுங்கள்.