ஜியோ சிம் பயன்படுத்தும் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டேட்டா பிளான் எது ? எந்த பிளானை தேர்ந்தெடுக்காலாம் ஒரு சிறப்பு பகிர்வை இங்கே காணலாம்.

ஜியோ பெஸ்ட் பிளான்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் மிகுந்த பரபரப்பாக செயல்படுகின்ற ஜியோ நிறுவனத்தின் முந்தைய பிளான்களில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

ப்ரீ-பெயிட் வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஜியோ நிறுவனம் ரூ.19 முதல் ரூ.9999 வரையிலான பிளான்களை செயல்படுத்தி வருகின்றது.

ஜியோ 309 பிளான் 

ஜியோ தன்னுடைய முந்தைய பிளான்களில் கூடுதலான மாற்றங்களை செய்து அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக பெரும்பாலானோர் விரும்பும் ரூ. 309 பிளானில் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் இலவச ரோமிங் உள்ளிட்ட சேவைகளுக்கு தினசரி டேட்டா தீர்ந்த பிறகு 128Kbps வேகத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில் 28 நாட்கள் என கால அளவு நிர்ணயிக்கப்படட்டிருந்தது. தற்போது இதே பிளான் 56 நாட்கள் என உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே ரூ. 309 ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு தினமும் 1ஜிபி தரவு பெறலாம்.

ஜியோ 399 பிளான் – தன் தனா தன்

மேலே குறிப்பிட்டுள்ள பிளானை விட ரூ.90 கூடுதலாக அமைந்துள்ள இந்த பிளானில் 28 நாட்கள் கூடுதலாக அதாவது ரூ. 399 கொண்டு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா என மொத்தமாக 84ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் இலவச ரோமிங் உள்ளிட்ட சேவைகளுக்கு தினசரி டேட்டா தீர்ந்த பிறகு 128Kbps வேகத்தில் வழங்கப்பட உள்ளது. ஆனால் இந்த பிளான் முதல் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஜியோ 509 பிளான்

தினசரி 2ஜிபி டேட்டா பயன்படுத்தும் ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு முந்தைய திட்டத்தின்படி 28 நாட்கள் என கால அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இது தற்போது ரூ. 509 கட்டணத்தில் 56 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தமாக 112ஜிபி தரவு மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள் இலவச ரோமிங் உள்ளிட்ட சேவைகளுக்கு தினசரி டேட்டா தீர்ந்த பிறகு 128Kbps வேகத்தில் வழங்கப்பட உள்ளது.

முழுமையான ப்ரீபெயிட் பிளான்களின் ஒப்பீட்டு அட்டவனையை கீழே காணலாம்..!

ஜியோ டேட்டாகால்SMSவேலிடிட்டி
ரூ. 309 prepaid56GB தினமும் 1ஜிபிஇலவசம்10056 நாட்கள்
ரூ. 349 prepaidமொத்தம் 20GBஇலவசம்10056 நாட்கள்
ரூ. 399 prepaid84GB தினமும் 1ஜிபிஇலவசம்10084 நாட்கள்
ரூ. 509 prepaid112GB தினமும் 2ஜிபிஇலவசம்10056 நாட்கள்

 

முழுமையான் ஜியோ ப்ரீ-பெயிட் பிளான் ஒப்பீட்டை படத்தில் காணலாம்.

ஜியோ போஸ்ட்பெயிட்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போஸ்ட்பெயிட் ரூ. 399 பிளானில் தினந்தோறும் 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டு 90 நாட்கள் வேலிடிட்டி காலத்தை வழங்கியுள்ளது.

முழுமையான போஸ்ட்பெயிட் பிளான்களின் ஒப்பீட்டு அட்டவனையை கீழே காணலாம்..!

ஜியோ டேட்டாகால்SMSவேலிடிட்டி
ரூ.309 postpaid60GBதினமும் 1ஜிபிஇலவசம்10060 நாட்கள்
ரூ.349 postpaidமொத்தம் 20GB (gadgetstamilan)இலவசம்10060 நாட்கள்
ரூ.399 postpaid90GB தினமும் 2ஜிபிஇலவசம்10090 நாட்கள்
ரூ.509 postpaid120GB தினமும் 1ஜிபிஇலவசம்10060 நாட்கள்

 

முழுமையான் ஜியோ போஸ்ட்-பெயிட் பிளான் ஒப்பீட்டை கீழே படத்தில் காணலாம்.

அனைத்து பிளான்களுமே ஜியோ ப்ரைம் சந்தா செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

உங்களுடைய டெக் தொடர்பான கேள்விகளை பதிவு செய்ய பயன்படுத்துங்கள் , தமிழ் டெக் டாக்கீஸ் – கேள்விகளை பதிவு செய்ய க்ளிக் பன்னுங்க