சென்னையில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் அறிமுகம் எப்பொழுது ?

இந்தியாவின் தொலை தொடர்பு நிறுவனங்களில் புதுவரவாக அமைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த புரட்சியாக ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது.

 

ஜியோ பைபர் பிராட்பேண்ட்

வருகின்ற மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் பிரிவியூ ஆபர் என்ற பெயரில் முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி , புனே மற்றும ஜாம் நகர் போன்ற பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோஃபைபர் சேவை பிரிவியூ சலுகை என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

90 நாட்களுக்கு நொடிக்கு 100MB வேகத்தில் வழங்கப்பட உள்ள ஜியோ பைபர் இலவச பிரிவியூ ஆபரை பெறுவதற்கு திரும்ப பெறதக்க ஆதார பாதுகாப்பு கட்டமாக ரூ.4500 செலுத்தப்பட வேண்டும். அதன்பிறகு, நொடிக்கு 100எம்பி வேகத்தில் மாதந்தோறும் 100GB டேட்டா வழங்குகின்றது.

மாதந்தோறும் 100GB தரவுகள் காலியான பிறகு நொடிக்கு 1MB வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளது. மேலும் கூடுதலாக காம்பிளிமென்ட்ரி சலுகையாக மூன்று மாதங்களுக்கு ஜியோடிவி, ஜியோமேக்ஸ், ஜியோநியூஸ், ஜியோஎக்ஸ்பிரஸ் நியூஸ் மற்றும் ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் வாயிலாக 5ஜிபி இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படுள்ளது.

 

மேலும் இல்லங்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த இடங்களில் கம்பிவட பிராட்பேண்ட் சேவையுடன் கூடுதலாக டூயல் பேன்ட் வை பை ரவுட்டரை வழங்குவதனால் இல்லம் அல்லது அலுவலகம் இடங்களில் வை-ஃபை இணைப்பிலும் இணையத்தை பயன்படுத்தலாம்.

வீடியோ சார்ந்த சேவைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தே ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, மும்பை, டெல்லி , புனே மற்றும ஜாம் நகர் போன்ற பகுதிகளில் தொடங்கப்பட உள்ள இந்த சேவை நாடு முழுவதும் உள்ள 100 முன்னணி நகரங்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் விரிவுப்படுத்த ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

Recommended For You