ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் வெளியிட்டுள்ள புதிய 4ஜி மொபைலில் உள்ள ஜியோபோன் டிவி கேபிள் உங்கள் கேபிள் டிவி பில்லை குறைக்க உதவுமா ? கேபிள் டிவி பிரச்சனையிலிருந்து விடுபட முடியுமா என இங்கே காணலாம்.

ஜியோபோன் டிவி கேபிள்

பல்வேறு வசதிகள் மற்றும் முன்பதிவு, ஆப்ஸ்கள் சிறப்பம்சங்கள் என பலவற்றையும் நாம் தொடர்ந்து வழங்கி வருகின்ற சூழ்நிலையில் ஜியோபோனில் உள்ள மிகவும் வரவேற்க்கதக்க மற்றும் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றான ஜியோபோனின் டிவி-கேபிள் நுட்பம் பயன் தருமா ? என அறிந்து கொள்ளலாம்.

ஜியோ டிவி

மிரர் கன்டென்ட் அதாவது உங்கள் போனில் இணையத்தின் வாயிலாக ஜியோ டிவி செயலில் பல்வேறு லைவ் சேனல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக முந்தைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்தையும் பெறலாம்.

அரசு தொலைக்காட்சி

ஸ்மார்ட் டிவி மட்டுமல்ல சாதரான அரசு விலையில்லா தொலைக்காட்சிகளிலும் இந்த இணைய தொலைக்காட்சி சேவையை பெறும் வகையில் ஜியோ போன் டிவி கேபிள் செயல்படும் என ஜியோ தெரிவித்துள்ளது. எனவே எந்த தொலைக்காட்சியிலும் காணலாம்.

டிவி இணைக்கும் கேபிள் இலவசமா ?

ஜியோஃபோன் மற்றும் தொலைக்காட்சி பெட்டியை இணைக்கும் கேபிள் இலவசமாக வழங்கப்படுமா என்பதனை பற்றி எந்த உறுதியான தகவலும் இல்லை. இலவசமாக வழங்காத சூழ்நிலையில் இதன் விலை ரூ. 250 முதல் ரூ. 400 க்குள் அமையலாம்.

கேபிள் கட்டணத்தை குறைக்குமா ?

மற்ற மாநிலங்களில் கேபிள் தொலைக்காட்சி கட்டணம் தமிழகத்தை விட கூடுதலாகவே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசு செயல்படுத்த உள்ள டிஜிட்டல் கேபிள் டிவி இலவச செட் டாப் பாக்ஸ் திட்டத்தினால் கேபிள் பில் அதிகபட்சமாக ரூ. 125 வரை அதிகரிக்கலாம்.

ஆனால் ஜியோபோனில் உள்ள ரூ.153 டேட்டா பிளானில் உள்ள 512 எம்பி நாள் முழுமைக்கான டேட்டா போதுமானதாக இருக்குமா என்றால் உண்மையில் இருக்காது.

ரூ. 309 திட்டத்தை டிவி கேபிள் பயன்படுத்துவோர் பெறுலாம் என ஜியோ குறிப்பிட்டுள்ளதால் இதில் 1ஜிபி உயர்வேக டேட்டா என்பது பொதுவாக சில மணி நேரங்களுக்குள் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு எதுவானதாக அமையும். ஆனால் இந்த திட்டமும் தமிழக கேபிள் சேவையுடன் ஒப்பீடுகையில் கூடுதலாகவே இருக்கும்.

ஜியோஃபோன் டிவி-கேபிள் யாருக்கு பயன் தரும் ?

தினசரி சில மணி நேரங்கள் தொலைக்காட்சி பார்ப்பவர்கள் மற்றும் தவறவிட்ட நிகழ்ச்சிகளை மொபைலில் காணுவதற்கு பதிலாக டிவியில் காண விரும்புபவர்களுக்கு மட்டுமே ஏற்றதாக அமையும்.ஆனால் சீரியில் பிரியர்களுக்கு நிரந்தரமாக ஏற்றதே இல்லை.

தவறவிட்ட நிகழ்ச்சிகளை காண்பதற்கான தற்காலிக பயன்பாடு மற்றும் மிக குறைந்தபட்ச டிவி பயன்பாடு, கேபிள் இணைப்புகள் இல்லாதவர்களுக்கு மட்டுமே ஜியோபோன் டிவி கேபிள் சேவை ஏற்றதாக இருக்கும்.

அடுத்து ஜியோ களமிறக்க உள்ள ஜியோ டிடிஎச் நண்மை தருமா என பொறுத்திருந்து காணலாம்.

மேலும் ஜியோபோன் செய்திகள் இங்கே படிக்கலாம் தொடர்ந்து எங்களை பேஸ்புக்கில் பின்தொடர fb.com/gadgetstamilan