ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் இலவசமாக வழங்கப்பட உள்ள ரூ.1500 டெபாசிட் செலுத்த வேண்டிய ஜியோபோன் வாங்காதீங்க என்பதற்கான காரணங்களை , இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஜியோபோன் வாங்கவே வாங்காதீங்க.! ஏன் தெரியுமா ?

ஜியோபோன் வாங்காதீங்க

பொதுவாக ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த இலவச பீச்சர் மொபைலின் நோக்கமே பல கோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்ற 2ஜி சேவை சார்ந்த ஃபீச்சர் ரக மொபைல் வாடிக்கையாளர்களை 4ஜி சேவையை பெறுவதன் நோக்கமாக மாற்றவே திட்டமிட்டுள்ளது.

ஜியோபோன் வாங்கவே வாங்காதீங்க.! ஏன் தெரியுமா ?

ஜியோ போன் உண்மையில் இலவசமே இல்லை..!

நீங்கள் 12 மாதங்களுக்கு ரூ. 153 ரீசார்ஜ் செய்தால் (ரூ.54 அல்லது ரூ.24 ) அதன் மொத்தம் ரூபாய் 1836 நீங்கள் பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தியுள்ள ரூ. 1500 என மொத்தம் ரூ. 3,336 ஆக மொத்தம் மூன்று வருடங்களுக்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகை ரூபாய் 5508 மற்றும் டெபாசிட் தொகையை சேர்த்து ரூபாய் 7008 மொத்த தொகையில் சராசரியாக 6-10 % வட்டி என கணக்கிட்டாலே வருடம் 300 முதல் 500 வரை வட்டியாக கிடைக்கும் என்பதனால் ரூ.1500 பெறுவது ஜியோவுக்கு சாதாரனமே என்பதுதான் உண்மை.

ஜியோ சேவை

ஜியோ சிம் 2ஜி மற்றும் 3ஜி போன்ற எந்த நெட்வொர்க்குகளும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்பதனால் 75 கோடி தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இணைக்கவே பட்டன் ஆப்ஷன் பெற்ற மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் இந்த மொபைலை நீங்கள் வாங்கினால் ஜியோ நிறுவனத்தின் அனைத்து சேவைகளை மட்டுமே நீங்கள் சார்ந்திருக்க வேண்டும், இந்த மொபைலில் ஒற்றை சிம் கார்டு ஆப்ஷன் மட்டுமே 4ஜி வோல்ட்இ ஜியோ நம்பர் இயங்கும் வகையில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருக்கும்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், வை-ஃபை, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட எந்த சேவைகளும் ஆரம்பகட்டத்தில் வழங்கப்படாது. இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கிடைக்க பெறலாம்.

ஜியோபோன் வாங்கவே வாங்காதீங்க.! ஏன் தெரியுமா ?

ரிலையன்ஸ் அடிமைகள்

ஆரம்பகட்டத்தில் இந்த மொபைலுக்கு எண்ணற்ற சலுகைகளை ஜியோ வழங்க தொடங்கினாலும், குறைந்தபட்சம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 153 கட்டணத்திலே அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுமா என்றால் அது சந்தேகத்துக்குரியதாகும்.

குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் கட்டாயம் எதாவது ஒரு ரீசார்ஜ் திட்டத்தை மேற்கொள்வது மிக அவசியம்,அவ்வாறு தவறினால் உங்கள் ஜியோ சிம் செயலிழக்கும், ரூ.1500 டெபாசிட் தொகை திரும்ப வழங்கபடுவதற்கு வாய்ப்பில்லை.

ஜியோபோன் சர்வீஸ்

ஜியோபோனில் பிரச்சனைகளை எதிர்கொண்டால் தீர்வு காண்பதற்கு எந்த மாதிரியான சர்வீஸ் மையங்கள் செயல்படுத்தப்படும் அல்லது ஏதேனும் எதிர்பாராது நிரந்தர பழுது ஏற்பட்டால் கட்டணம் திருப்பி தரப்படுமா என்றால் அதுவும் சந்தேகத்துக்குரியதாகும்.

ஜியோபோன் வாங்கவே வாங்காதீங்க.! ஏன் தெரியுமா ?

ஐடியா போன்

அதிரடியான திட்டத்தை ஐடியா செல்லூலார் நிறுவனம் செயல்படுத்தி வருகின்றதை பற்றி நாம் முன்பே குறிப்பிட்டிருந்தோம், 2500 விலையில் ஸ்மார்ட்போன் மொபைலில் உள்ள அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் 2ஜி முதல் 4ஜி வரை எந்த நெட்வொர்க்கிலும் இயங்கும் வகையில் இரட்டை சிம் கார்டு வசதியுடன் கூடிய மொபைல்போன் ஒன்றை ஐடியா அறிமுகம் செய்ய உள்ளது.

ஜியோபோன் வாங்கவே வாங்காதீங்க.! ஏன் தெரியுமா ?

ஏர்டெல் போன்

ஏர்டெல் நிறுவனமும் தங்களுடைய வாடிக்கையாளர்களை தொடர்ந்து சேவையை பயன்படுத்தும் வகையில் கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பன்டில் சலுகைகளை வழங்க திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது.

சலுகைகள்

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய 2ஜி முதல் 3ஜி வரையிலான வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை விரைவில் வெளியிடும் வாய்ப்புகள் உள்ளதால் தொடர்ந்து உங்களுடைய நெட்வொர்க்கில் மேலும் சில மாதங்கள் இணைந்திருங்கள்.

ஜியோபோன் வாங்கவே வாங்காதீங்க.! ஏன் தெரியுமா ?

அவசரம் வேண்டாம்

பலருக்கும் நினைவிருக்கலாம் ரூ. 251 க்கு ஃப்ரீடம் 251 மொபைல் பற்றி அந்த நிலையை ஜியோ ஏற்படுத்தாது என்றாலும், ஜியோபோன் ஆகஸ்ட் 24 முதல் முன்பதிவு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீங்கள் செப்டம்பர் அல்லது டிசம்பர் இறுதி வரை காத்திருங்கள்.

ஜியோபோனை விட கூடுதலான வசதிகளை பெற்ற பல்வேறு 4ஜி ஃபீச்சர் மொபைல்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளிவரக்கூடும்.

சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் நோக்கியா 3310 மொபைலில் 3ஜி வருவது உறுதியாகியுள்ளதால் அதே பிரபலமான செங்கல் செட்டில் 4ஜி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆனால் ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள்,மற்ற எந்த மொபைல் தயாரிப்பாளரும், தொலைத்தொடர்பு நிறுவனமும் இலவசம் என்ற பெயரில் மறைமுகமாக உங்களிடம் கட்டணம் வசூலிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here