ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக தொடங்கப்பட உள்ள ஜியோஃபைபர் ஹோம் பிராட்பேண்ட் சேவைக்கான இலவச ப்ரீவியூ ஆஃபரை வழங்கியுள்ளது.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில்

 

ஜியோஃபைபர் பிராட்பேண்ட்

  • முதற்கட்டமாக முன்னணி நகரங்களில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஹோம் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் ஜியோஃபைபர் என பெயரியிடப்பட்டுள்ளது.
  • அதிகபட்சமாக 100Mbps வேகத்தில் இணைய இணைப்பை பெறலாம்.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில்

முதற்கட்டமாக நவி மும்பை மாநகரில் தொடங்கப்பட உள்ள ஜியோ ஃபைபர் முன்னோட்ட சேவை முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டாலும் முன் பணமாக திரும்ப பெறத்தக்க பாதுகாப்பு வைப்பு ரூபாய் 4500 செலுத்த வேண்டும்.

இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளானில் மாதந்தோறும் 100GB இலவச டேட்டாவை அதிகபட்சமாக நொடிக்கு 100MB வேகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் வழங்கப்பட்டுள்ள 100GB டேட்டா தீர்ந்த பின்னர் FUP வாயிலாக குறைந்தபட்ச வேகம் 1Mbps ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஃபைபர் பிராட்பேண்ட் மிக விரைவில்

 

வைஃபை வாயிலாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவைகளை கனெக்ட் செய்யலாம். முதற்கட்டமாக நவிமும்பை பகுதியில் தொடங்கப்பட உள்ள சேவை சென்னை, மும்பை, டெல்லி , புனே மற்றும ஜாம் நகர் போன்ற பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் உள்ள ஜியோஃபைபர் சேவை பிரிவியூ சலுகை என்ற பெயரில் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

For more tamil tech news from GadgetsTamilan, like us on Facebook at facebook.com/gadgetstamilan and follow us on Twitter @gadgetstamilan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here