ரிலையன்ஸ் குழுமத்தின் அடுத்த அதிரடி சேவையாக 3 கோடிக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலவச வை-ஃபை சேவை வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஜியோ இலவச வை-ஃபை

சமீபத்தில் ஜியோ வெளியிட்ட விலையில்லா ஃபீச்சர் போன் ஜியோபோனை தொடர்ந்து அடுத்த திட்டமாக நாடு முழுவதும் உள்ள 38,000க்கு மேற்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் இலவச வை-ஃபை சேவை வழங்குவதற்கான திட்ட வரைவு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு வழங்கியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நமது நாட்டில் உள்ள டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத துறைகளில் உள்ள  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கீழ் உள்ள 38,000 கல்லூரிகளுக்கு இலவசமாக வை-ஃபை சேவை வழங்குவதற்கான திட்ட வரைவு ஒன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சுமார் 3 கோடிக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் திட்டத்திற்கான எந்தவொரு பணத்தையும் அவர்கள் (ரிலையன்ஸ்) வசூலிக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்காமல் அதை அனுமதிக்க முடியாது. இது ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான செயலாகும் என்று  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.