ஜியோ பிரைம் ரீசார்ஜ் செய்த மற்றும் ப்ரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு ஜியோ 4ஜி இலவச சேவை ஜூலை மாதம் வரை எவ்வாறு பெறலாம் என அறிந்துகொள்ளலாம்.

ஜூலை மாதம் வரை ஜியோ இலவச சேவை பெறுவது எவ்வாறு..?

ஜியோ பிரைம் சம்மர் சர்பரைஸ்

  • ஜியோ பிரைம் கால அவகாசம் ஏப்ரல் 15ந் தேதி வரை நீட்டிகப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 15ந் தேதிக்குள் பிரைம் கட்டணம் ரூ.99 செலுத்த வேண்டும்.
  • மேலும் முதல் மாதம் ரீசார்ஜ் ரூ.303 அல்லது அதற்கு மேற்பட்ட பிளான்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இலவச சேவையை வழங்கி வரும் ஜியோ மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையை கட்டணம் செலுத்திய பிறகு வழங்குகின்றது. எவ்வாறு எனில் நீங்கள் ஜியோ ப்ரைம் மெம்பர் திட்டத்தில் முதலில் இணைய வேண்டும் அடுத்த ரூ.303 அல்லது அதற்கு மேற்பட்ட எந்த பிளானிலும் முதல் ரீசார்ஜ் ஏப்ரல் 15க்குள் செய்யப்பட வேண்டும்.

ஜூன் மாதம் வரை ஜியோ இலவசம்

அவ்வாறு இரண்டு ரீசார்ஜ்களும் செய்யும்பட்சத்தில் வருகின்ற ஜூலை மாதம் வரை நீங்கள் எந்த பிளானில் ரீசார்ஜ் செய்தீர்களோ அதற்கு உன்டான இலவச டேட்டா வசதியை மூன்று மாதங்கள் பெறலாம். நீங்கள் தற்பொழுது ரீசார்ஜ் செய்யும் கட்டணம் ஜூலை மாதத்திற்கு உண்டான மாதந்திர கட்டணமாகும். ஜூன் வரை இலவசமாகவும் , ஜூலைக்கு தற்பொழுது செலுத்திய கட்டணத்தை ஜியோ பயன்படுத்திக் கொள்ளும். ஜூலைக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் அடுத்த ரீசார்ஜ் செய்தாலே போதுமானதாகும்.

அதாவது நீங்கள் ரூ.303 பிளானில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 1 ஜிபி டேட்டா ஜூலை மாதம் பெறலாம். அதுவே நீங்கள் ரூ.499 பிளானில் ரீசார்ஜ் செய்திருந்தால் தினமும் 2ஜிபி டேட்டா பெறலாம்.

நீங்கள் ரீசார்ஜ் முன்பாகவே செய்திருந்தால் எந்தவிதமான ரீசார்ஜூம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இதுவரை ரீசார்ஜ் செய்யவில்லை எனில் ஏப்ரல் 15க்குள் அதாவது ரூ.402 ரீசார்ஜ் செய்தால் (பிரைம் (99) + முதல் மாதம் ரீசார்ஜ்(303 ) )  மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளை அனைவரும் பெறலாம்.

ஜூலை மாதம் வரை ஜியோ இலவச சேவை பெறுவது எவ்வாறு..?

தற்போது வரை 72 மில்லியன் வாடிக்கையாளர்கள், ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

ஜூலை மாதம் வரை ஜியோ இலவச சேவை பெறுவது எவ்வாறு..?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here