கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்திய தொலை தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி செய்த ரிலையன்ஸ ஜியோ இலவச சேவை இன்றுடன் நிறைவடைகின்றது.

ஜியோவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரமிது...!

ஜியோ இலவசம்

  • கடந்த செப்டம்பர் 5ந் தேதி முதல் பொது மக்களுக்கு சேவை தொடங்கப்பட்டது.
  • மார்ச் 31 வரை இலவசமாக வழங்கப்பட்ட சேவை ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தன் தனா தன் என்ற புதிய கட்டண பிளான் மூன்று மாத காலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலில் வெல்கம் ஆஃபர் , ஹேப்பி நியு இயர் ஆஃபர் , இறுதியாக சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள் என அதிரடியை கிளப்பி ஜியோ இலவச சேவை இன்று இரவு 11.59 மணிக்கு இனிதே நிறைவு பெறுகின்றது.

ஜியோவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரமிது...!

பிரைம் ரீசார்ஜ் உள்பட முதல் மாத ரீசார்ஜ் மார்ச் 31க்கு முன்னதாக அல்லது சம்மர் சர்ப்ரைஸ் என அறிவிக்கப்பட்ட சலுகையை ஏப்ரல் 9க்கு முன்பாக ரீசார்ஜ் செய்த அனைவருக்கும் ஜூன் 30ந் தேதி வரை நிச்சியமாக இலவச டேட்டாவை பெறலாம்.

ஆனால் தற்பொழுது நடைமுறையில் உள்ள தன் தனா தன் சலுகைகள் கட்டண சேவையாகும். பிரைம் உறுப்பினர் திட்டத்துடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகைகள் 3 மாதங்கள் அதாவது மாதத்துக்கு 28 நாட்கள் என கணக்கிடப்பட்டு 84 நாட்களுக்கு டேட்டாவை வழங்குகின்றது. இந்த ரீசார்ஜ் ஒரு முறை மட்டுமே அதாவது முதல் முறை மட்டுமே செய்ய இயலும்.

எந்த ரீசார்ஜூம் செய்யதாவரா நீங்கள் ?

எந்த ரீசார்ஜும் செய்யாத வாடிக்கையாளர்களுக்கும் செய்தவர்களுக்கும் என்றும் ஜியோ இலவச அழைப்புகளுக்கு மட்டும் முடிவில்லை என்பதனை ஜியோ முன்பே உறுதி செய்துள்ளதால் வரம்பற்ற அழைப்பிகளை எந்த நெட்வொர்க்குடனும் மேற்கொள்ளலாம். மேலும் நாடு முழுவதும் இலவச ரோமிங் வழங்கப்பட உள்ளது.

ஜியோவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரமிது...!

இன்றுடன் ஜியோ இலவச சேவை நிறைவடைவந்தாலும் தொலை தொடர்பு துறையில் தன்னை மாபெரும் சக்தியாக ஜியோ நிறுத்திக்கொள்ள எந்த அதிரடியான திட்டங்களையும் எதிர்காலத்தில் அறிவிக்க என்றுமே ரிலையன்ஸ் ஜியோ தயாராக உள்ளது..என்பதே .. உண்மையே….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here