ஜியோ இலவச சேவைக்கு தடை வருமா ?

கடந்த செப்டம்பர் 5 ந் தேதி ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ 4ஜி சேவையை தொடங்கப்பட்டு நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் 90 நாட்களுக்கு ஜியோ சேவையை இலவசமாக வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ள நிலையில் இந்த சேவை தொடருமா ? என சந்தேகம் எழுந்துள்ளது.

ஏர்டெல் கேள்வி ?

இந்தியாவின் டிராய் அமைப்பு தொலைதொர்பு துறை நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உன்டான விதிமுறைகளை வழங்கி வருகின்றது. 90 நாட்கள் மட்டுமே இலவச சேவை வழங்க வேண்டும் என தொலை தொடர்பு துறையில் சட்டம் உள்ளதாக தெரிவிக்கும் மேலும் 90 நாட்களுக்கு எவ்வாறு ஜியோ இலவச சேவை நீட்டிக்கப்பட்டது ? என கேள்வி எழுப்பியுள்ளது.

ஜியோ வருகையால் மிகுந்த நஷ்டத்தை சந்திக்க தொடங்கி ஏர்டெல் , ஐடியா மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் கடுமையாக சரிவை சந்தித்துள்ள நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு எதிராக களமிறங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் நேரடியாக தொலைத் தொடர்பு பிணக்குகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அளித்துள்ள 25 பக்க மனுவில் எவ்வாறு ஜியோ நிறுவனத்துக்கு மேலும் 90 நாட்கள் இலவச சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து டிராய் நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எந்த காரணத்தின் அடிப்படையில் மேலும் 90 நாட்கள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை கடந்த டிசம்பர் 20ந் தேதி கேட்டிருந்ததாம். ஆனால் இதுவரை ஜியோ எந்த பதிலும் அளிக்கமால் உள்ளதால் டிராய் அமைப்பு வருகின்ற டிசம்பர் 29க்குள் பதில் அளிக்க வேண்டும் என ஜியோவை கண்டித்துள்ளது குறிப்படதக்கதாகும்.

ஜியோ 4ஜி இலவசம் சேவை சட்டத்துக்கு புறம்பானதாக இருப்பதாக புகார் அளித்துள்ள ஏர்டெல் ஜியோ இலவச சேவையை ரத்து செய்ய கோரியுள்ளது. இலவச சேவை தொடருமா ? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்….

Recommended For You