இந்திய தொலைதொடர்பு சந்தையை உலுக்கி வரும் ஜியோ நிறுவனம் மார்ச் 31 , 2017 வரை இலவச சேவையை நீட்டித்துள்ள நிலையில் மார்ச் 31க்கு பிறகும் இலவச கால் சேவையை வழங்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.

ஜியோ இலவச சேவை தொடரும் ? ஜூன் 30 , 2017 வரை

ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் வழங்கி வந்த இலவச சலுகை டிசம்பர் 31, 2016 வரை முடிவடைந்த நிலையில் கூடுதலாக ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என்ற பெயரில் மார்ச் 31, 2017 வரை வழங்கி உள்ளது. இதே போன்ற மற்றொரு சலுகையை ஜூன் 30 ,2017 வரை வழங்கலாம் என தற்பொழுது வதந்திகள் பரவ தொடங்கியுள்ளது.

ஜியோ இலவச சேவை

ஜூன் 30 வரை இலவச கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவையை வழங்குவதுடன் டேட்டா பெறுவதற்கு மிக குறைந்த அளவு கட்டணத்தை ஜியோ நிர்ணையம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது மார்ச் 31க்கு பிறகு 4ஜி டேட்டா பெறுவதற்கு மட்டும் ரீசார்ஜ் செய்தால் இலவச கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் கிடைக்கலாம். மேலும் ஜியோ ஆப்ஸ்கள் கட்டண சேவைக்கு மாற வாய்ப்புள்ளது.

முன்பு வெளியிடப்பட்ட கட்டண விகிதம் செயல்படுத்தப்படாமல் புதிதாக அதாவது மிக குறைந்த விலையில் ரூ.100 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டேட் டேட்டாவை மாதம் முழுவதும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்தான திட்ட வரைவு டிராய் அமைக்கு வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மார்ச் 31க்கு பிறகும் மிக குறைந்த விலை கட்டணத்திலே ஜியோ 4ஜி சேவை ஜூன் 30 வரை தொடரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here