ஜூலை வரை இலவச சேவை ஜியோ சம்மர் சர்பரைஸ் அறிமுகம்

ஜியோ பிரைம் உறுப்பினராக இணைவதற்கு ஏப்ரல் 15ந் தேதி வரை ஜியோ சம்மர் சர்பரைஸ் என்ற பெயரில் ரூ.99 விலையில் ரீசார்ஜ் செய்யும் பிரைம் மெம்பர்ஷீப் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் கால அவகாசம்

  • ரூ.99 ஜியோ பிரைம் பிளான் ரீசார்ஜ் ஏப்ரல் 15 ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 72 மில்லியன் பேர் பிரைம் உறுப்பினர் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
  • ரூ.303 உள்பட மற்ற பிளான்களின் சிறப்பு சலுகைகள் ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜியோ பிரைம் சலுகைகள் மார்ச் 1ந் தேதி முதல் மார்ச் 31ந் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஏப்ரல் 15ந் தேதி வரை ஜியோ பிரைம் மெம்பர்ஷீப் உள்பட ரூ.303 முதல் அனைத்து பிளான்களின் கூடுதல் இலவச டேட்டாவும் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யப்படும்பொழுது அதன் பலன்களை ஜூலை மாதம் வரை பெறலாம்.

ஜியோ பிரைம் பிளான் முழுவிபரம்

ரூ.99 கொண்டு ரீசார்ஜ் செய்த பின்னர் ஜியோ ப்ரைம் வாயிலாக நீங்கள் ஏப்ரல் 1 , 2017 முதல் மார்ச் 31 , 2018 வரையிலான ஒரு வருட காலகட்டத்தில் பிரைம் மெம்பராக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் ரூ. 303 கொண்டு மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் தற்பொழுது நடைமுறையில் உள்ள ஹேப்பி நியூ இயர்ஸ் சலுகையை பெறலாம்.

  • ரூ.99 ஜியோ ப்ரைம் மெர்பர்ஷீப் கொண்டு வருடம் முழுவதும் இலவச அழைப்புகளை பெறலாம்.
  • ரூ.303 ரீசார்ஜ் மாதந்தோறும்
  • தினமும் 1ஜிபி 4ஜி டேட்டா மற்றும் 128 Kbps வேகத்தில் வரம்பற்ற பொதிகள் வழங்கப்படும்.
  • அனைத்து அழைப்புகளும் இலவசம் (ரோமிங் உள்பட)
  • அனைத்து எஸ்எம்எஸ் களும் இலவசம்
  • ஜியோ ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாக 1 வரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஜியோ மூவிஸ்,ஜியோ மேக்ஸ் , ஜியோ டிவி உள்பட அனைத்து ஆப்ஸ்களும்

 

Recommended For You