இந்திய தொலை தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி செய்து வருகின்ற ரிலையன்ஸ் ஜியோ-டிராய் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தாலும் தொலை தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது.

ஜியோ-டிராய் கூட்டு களவானிகளா..?

ஜியோ-டிராய்

 • முதன்முறையாக வர்த்தகரீதியான சேவையை செப்டம்பர் 5ந் தேதி ஜியோ தொடங்கியது.
 • தொடர்ச்சியாக 6 மாதங்கள் வெல்கம் ஆஃபர் ,ஹேப்பி நியூ இயர் சலுகை என அறிமுகம் செய்தது
 • மீண்டும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் என மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்யும் டிராய் அமைப்பின் செயல்பாடுகள் பெரும்பாலானவை ஜியோ நிறுவனத்துக்கு ஆதரவாகவே உள்ளதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில்,  தற்பொழுது ஜியோ அறிவித்த இலவச சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகளுக்கு டிராய் தடை விதித்தாலும் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் வசதியை வழங்கி வருவதனுடன் பிரைம் மற்றும் முதல் மாதம் ரூபாய் 303க்கு மேல் எந்த பிளானில் ரீசார்ஜ் செய்தாலும் ஜூன் வரை சம்மர் சர்ப்ரைஸ் பெறலாம் என்றே ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோ-டிராய் கூட்டு களவானிகளா..?

டிராய் புதிய சம்மர் சலுகைகளுக்கு தடை விதித்துள்ளதாக செய்தியை வெளியிட்டிருந்த ஆர்ஜியோ, ரீசார்ஜ் செய்யும் ஆப்ஷனை நீக்காமலும், இறுதி தேதியும் ஏப்ரல் 15 வரையே தொடரலாம் என்றே சில தகவல்கள் தெரிவிக்கின்றது, ஆனால் டிராய் அமைப்பு இதற்கு எந்த ஆட்சேபனையும் இதுவரை வெளியாடமலே உள்ளது.

தடை குறித்து கருத்து தெரிவித்த டிராய் அமைப்பு தலைவர் ஜியோவின் புதிய சலுகை தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு பொருந்தாத காரணத்தாலே தடை விதிக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜியோ-டிராய் கூட்டு களவானிகளா..?

ஜியோ தில்லுமுல்லுகள்

ட்ராய் என்னென்ன மறைமுக உதவிகளை ஜியோவுக்கு செய்துள்ளது.

 • இன்டர்கனெக்ட் பயன்பாடு கட்டணங்களை (IUC) ஜியோ சேவைகள் தொடங்கப்படுவதற்கு (செப்டம்பர் 2016) ஒரு ஆண்டிற்கு முன்னதாகவே மாற்றங்கள் சார்ந்த கொள்ளகைகளை உருவாக்க தொடங்கியுள்ளது.
 • ட்ராய் ஒழுங்குமுறை அமைப்பின் விதிகளின் படி ஒரு டெலிகாம் ஆபரேட்டர் ஒரு அதிர்வெண் பேண்டில் கிடைக்கப்பெறும் அலைமாலையின் 50%க்கும் மேற்பட்ட ஸ்பெக்டரம்களை குவிக்க முடியாது என்கிறது.
 • 4ஜி அலைவரிசையில் உச்சவரம்பு 30MHz என்று உள்ளது. 4ஜி சேவையில், முதல் ஏலம் 20MHz என்பதால், 4ஜி சேவை வழங்கும் நிறுவனங்களிடம் 20MHz ஸ்பெக்ட்ரம் இருந்தது.\
 •  4ஜி கொண்டுள்ள நிறுவனங்கள் ஒருவேளை அதிக ஸ்பெக்ட்ரம் பெற்றால் புதிய ஏலத்தில் 20MHz என்ற உச்சவரம்பு 10MHz என்று குறைக்கப்பட வேண்டும். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் 20 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இயக்குபவராக உள்ளது.
 •  டிராய் 2016ல் ஆரம்பத்தில் 20 மெகா ஹெர்ட்ஸ் என்ற வரம்பில் இருந்து 10 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் தொகுதி என்று அளவை குறைத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் ஜியோ 4ஜி ஏலத்தில் பங்கேற்க வசதியாய் இருந்துள்ளது ஒருவேளை ட்ராய் 4ஜி ஸ்பெக்ட்ரம் தொகுதி குறைப்பை பரிந்துரைக்காமல் இருந்திருந்தால், ஜியோ ஏலத்தில் பங்குகொண்டிருக்கவே முடியாது.

ஜியோ-டிராய் கூட்டு களவானிகளா..?

 • 700MHz அலைவரிசை மற்றும் 800 MHz அலைவரிசை ஸ்பெக்ட்ரம் மிகவும் செயல்திறன் மிக்கதாக இருக்கிறது. கடந்த ஏலத்தில், 700மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் வரை விற்பனை இருந்தது. பின்னர் நாடுமுழுவதும் ஸ்பெக்ட்ரமின் கீழ் அதன் விலை ரூபாய் 55,000 கோடி என டிராய் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 • இதன் விளைவாக, அந்த அதிகபட்ச விலையின் காரணமாக மற்ற நிறுவனங்கள் பங்கேற்க இயலாத நிலையில் அம்பானி 800MHz  அலைவரிசை ஜியோ மட்டுமே பெற்றுள்ளது.
 • 2 ஜி மற்றும் 3 ஜி சேவைகளுக்கான கால்டிராப் விதிமுறைகளை அமைத்துள்ளது ஒருவேளை அந்த தரத்தை நிறுவனங்களால் வழங்க முடியாதபட்சத்தில் வழங்குநர்களுக்கு அபராதங்களை பரிந்துரைக்கிறது.
 • 4ஜி சேவைகள் வாயிலாக அழைப்புகள் துண்டிப்புகளை அளிக்கும் பட்சத்திலும் எந்தவிதமான அபராதங்களுக்குள்ளும் சிக்காமல் இருக்க வழிவகை செய்வதனால் ஜியோ தப்பித்து விட்டது.
 • உள்ளிணைப்புக்கான (POIs) புள்ளிகளை ஜியோவிற்கு வழங்கவில்லை என்பதற்காக மூன்று நிறுவனங்களுக்கு ரூ.3,000 கோடி வரையில் அபராதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜியோ-டிராய் கூட்டு களவானிகளா..?

ஜியோ ப்ரைம்

சமீபத்திய ஆய்வகளின் அடிப்படையில் மார்ச் 2018க்குள் 100 மில்லியன் கட்டண  வழி பெறும்  சந்தாதாரர்களை ஜியோ கொண்டிருக்கலாம் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தனது எதிர்கால நலன்களை கருதியே ஜியோ இலவச சேவைகளை வாரி வழங்கி வருகின்றது.

தற்பொழுது திடீரென அறிவிக்கப்பட்ட சம்மர் சலுகை ரத்துக்கு பின்னணியாக இருக்கும் முக்கிய காரணங்களிலே ஒன்றே ஜியோ பிரைம் வாடிக்கையாளர் எண்ணிக்கை 10 கோடி மற்றும் முதல் மாத ரூ.303 மற்றும் அதற்கு ரீசார்ஜ் செய்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 10 கோடியை எட்ட வேண்டும் என்ற இலக்கினை பெற்றே ரிலையன்ஸ் ஜியோ செயல்படுகின்றது. மார்ச் 31ந் தேதி முடிவில் 7.2 கோடி பேர் பிரைம் ரீசார்ஜ் செய்திருந்ததாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ஜியோ-டிராய் கூட்டு களவானிகளா..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here