இந்திய தொலை தொடர்பு வட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வருகின்ற நிலையில் ஜியோ 4ஜி டேட்டா பிளானை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்துக்கு தீர்வு இங்கே காணலாம்.

ஜியோ டேட்டா பிளான்

ஜியோ இலவச சேவை மற்றும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகைகள், தன் தனா தன் போன்ற பிளான்கள் நிறைவுற ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் அடுத்த ரீசார்ஜ் செய்ய எந்த பிளான் எந்த நெட்வொர்க் என குழப்பத்தை தவிரக்க ஒரு ஒப்பீட்டை இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஜியோ

ஜியோ நிறுவனம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 1ஜிபி டேட்டா மற்றும் 2ஜிபி டேட்டா பிளான்கள் மிகவும் சவாலான விலையில் கிடைக்கின்றது.

ஜியோ டேட்டாகால்SMSவேலிடிட்டி
ரூ. 309 prepaid28GB தினமும் 1ஜிபிஇலவசம்10028 நாட்கள்
ரூ. 509 prepaid56GB தினமும் 2ஜிபிஇலவசம்10028 நாட்கள்
ரூ. 309 postpiad30GBதினமும் 1ஜிபிஇலவசம்10030 நாட்கள்
ரூ. 509 postpiad60GB தினமும் 2ஜிபிஇலவசம்10030 நாட்கள்

 

இரண்டு மாதங்கள் வேலிடிட்டி பெற விரும்புபவர்கள் ரூ.999 பிளானை தேர்ந்தெடுத்தால் 60 நாட்களுக்கு மொத்தமாக 60 ஜிபி டேட்டா பெறலாம். ஜூன் மாதம் 30ந் தேதி வரை ஜியோ பயனர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டு இலவச சேவை முடிவுக்கு வந்திருந்தாலும், அதனை தொடர்ந்து ஒரு மாதம் ரிசார்ஜ் செய்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்று வரும் நிலையில் இந்த பிளான்கள் மாத இறுதிக்குள் பெரும்பாலான பயனாளர்களுக்கு முடிவடைகின்றது.